"அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் அடுத்தவர்கள் தலையிட முடியாது!"
இந்திய அரசியலின் அச்சாணியாக இருப்பவை அரசியல் கட்சிகள்தான். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்திய அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கு 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மட்டுமே உள்ளது. அதுவும்கூட ஒரு மேம்போக்கான சட்டம்தான். 'இந்தியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேரலாம். தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தொடங்கப்பட வேண்டும்' என்பதற்கு மேலாக கட்சிகளுக்கான பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இந்தியாவில் இல்லை.
தனிமனிதர்கள் அமைதியான வழியில் சங்கமாக சேர்ந்து இயங்கலாம் (Everyone has the right to freedom of peaceful assembly and association) என்கிற அடிப்படை மனித உரிமையின் அடிப்படையில்தான் அரசியல் கட்சிகள் உள்ளன. அதாவது, அரசியல் கட்சிகள் என்பவை தனிமனிதர்களின் சங்கம்தான். பொது அமைப்பு அல்ல.
எனவே, ஒரு அரசியல் கட்சியாக சேர்ந்து இயங்குவோர் - தமது அமைப்புக்குள் எந்தவிதமான முடிவையும் எடுக்கலாம். யாரை வேண்டுமானாலும் தமக்குள் மாற்றிக்கொள்ளலாம்.
அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் வெளியில் இருந்து எவரும் தலையிட முடியாது. நிர்பந்திக்கவும் முடியாது! அரசியல் கட்சிகளின் சட்டத்துக்கு உட்பட்ட உள்விவகாரங்களில் அரசாங்கமோ, நீதிமன்றமோ தலையிட முடியாது. இதுதான் நிதர்சனமான நிலைமை.
எனவே, அடுத்த கட்சிகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் ஆசையை விட்டுவிட்டு, அவரவர், அவரவர் வேலையை பார்ப்பது நல்லது.
Comments
Post a Comment