Anderson Marian அமெரிக்கப் பாடகி

நியூயார்க் நகரில் தனது குரல்,கலை திறனை வெளிப்படுத்திக் அங்கீகாரம் பெற்ற கருப்பின  பெண் .



அமெரிக்க பாடகி.1924-ல் நியூயார்க் நகரில் முதன்முதலாகப் பாடியபோதே குரலினிமைக்காகவும் கலைத்திறக்காகவும் உடனடியாக அங்கீகாரம் பெற்றவர்.ஆனால்,கறுப்பினப் பெண்ணாக இவர் இருந்ததால், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியையோ, இசை நாடகத்தையோ தொடர்ந்து நடத்துவது இயலாமல் போனது. 

1930 -ல் நடைபெற்ற லண்டன் நிகழ்ச்சியும்,தொடர்ந்து ஸ்காண்டினேவிய சுற்றுப் பயணங்களும் இவரை, ஐரோப்பாவில் புகழ்பெறச் செய்தன. 


1935 வரை ஐரோப்பாவிலேயே பிரத்யேகமாகக் கலைப்பணி பரிந்தார். 1939 -ல் வாஷிங்கடனில் உள்ள கான்ஸ்டிடியூஷன் அரங்கில்,இவரது நிகழ்ச்சியை நடத்த அனுமதி தராமல், அமெரிக்கப் புரட்சியின் வாரிசுகள் என்ற அமைப்பினர் தடுத்தனர். 

அப்போது, லிங்கன் நினைவிடத்தில் இவர் பாடுவதற்கு எலீனார் ரூஸ்வெல்ட் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி,பெரிய வரவேற்றைப் பெற்றது.1955-ல் மெட்ரோபாலிடன் ஓபராவில் பாடிய முதல் கறுப்பினப் பாடகியான இவர்,அச்சமயம் அறுபது வயதினை நெருங்கியிருந்தார்.

Comments