பாரம்பரியத் கம்பு மாவு லட்டு
கம்பை தண்ணீர் விட்டு 12 மணி நேரம் ஊறவைத்து முளைவிட்ட பின் காயவைத்து கடாயில் பொன் நிறமாக வறுக்கவும். அதனுடன் 250கிராம் பொட்டுக்கடலை, சுக்கு ஒரு சிறு துண்டு, ஏலக்காய் சேர்த்து மிஷினில் மாவாக அரைக்கவும். அத்துடன் தேன், தேங்காய் துருவல் சேர்த்து மாலை வேளைகளில் குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு 1/2 கிலோ எடுத்து நன்றாக மூன்று முறை கழுவி கல் அரித்து காய வைத்து வெறும் கடாயில் வறுத்து அத்துடன் 10 ஏலக்காய் சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
கேழ்வரகு மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து புட்டு மாவு தயார் செய்யவும். இட்லி தட்டில் பரவலாக வைத்து வேக வைத்து சர்க்கரை, தேங்காயைத் துருவல், நெய் கலந்து பரிமாறவும்.
கோதுமைப் புட்டு
கேழ்வரகு கூழ்
ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதித்ததும் 25 கிராம் பச்சரிசி குருனையைப் போட்டு வெந் ததும் கேழ்வரகு மாவு 1 டம்ளர் எடுத்து தண்ணீர் கரைத்து அதனுடன் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.தேவையான உப்பு சேர்த்து கிளறி கூழ் நன்றாக வெந்ததும் (கையில் ஒட்டாமல் வரும் பதம்) இறக்கி ஆறியதும் அத்துடன் மோர் சேர்த்து கரைத்து சாப்பிடவும்,சிறிதளவு வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.மிகவும் ருசியாக இருக்கும்.கோடை காலத்துற்கு ஏற்ற நல்ல உணவு. நல்ல ஊட்டச்சத்து உடைய கிராமத்து பாரம்பரியத்தை உணவு.
இது போன்ற நல்ல தமிழர் பாரம்பரிய உணவு முறையைப் அடுத்த கட்டுரையில் தருகிறேன்.
Comments
Post a Comment