அமெரிக்கா: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி புவிநாளில் தீக்குளிப்பு!"
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்பு 2022 ஏப்ரல் 22 புவிநாள் அன்று Wynn Bruce எனும் நபர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளார்.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரும் பிரச்சாரங்களில் பங்கேற்றுவந்த இவர், 2020 அக்டோபர் மாதத்திலேயே, '2022 புவிநாளில் (Earth Day) தீக்குளிப்பேன்' என்பதை குறிப்பிடும் வகையில், தனது முகநூல் பதிவில் இந்த நாளினை தீ சின்னத்துடன் பதிவிட்டுள்ளார்.
புத்தமத கோட்பாடுகளை பின்பற்றிவந்த இவர், பொதுநோக்கிற்காக தீக்குளிக்கும் புத்த துறவிகளின் நம்பிக்கையை பின்பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், தியான நிலையில் அமர்ந்தவாறு தீக்குளித்த நிகழ்வின் போது இவர் சத்தம் எழுப்பவோ, துடிக்கவோ, ஓடவோ இல்லை என நிகழ்வை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
'இது தற்கொலை அல்ல. காலநிலை மாற்ற நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக புரூஸ் மேற்கொண்ட இரக்கத்துடன் கூடிய அச்சமற்ற செயல்' என்று அவரது நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் அவசரநிலையை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்கிற காரணம் சரியானதாக இருந்தாலும், உயிரை தியாகம் செய்வது ஏற்புடையது அல்ல.
Comments
Post a Comment