வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
பசுமைத் தாயகம் மற்றும் சத்தியமங்கலம் காமதேனு கலைக் கல்லூரி இணைந்து ஈரோடு மாவட்டம் புலிகள் காப்பக பகுதியான சத்தியமங்கலம் பண்ணாரி அருகே குய்யனுர் பிரிவு முதல் கொண்டை ஊசி வளைவு வரை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் இருபுறமும் வீசிச்சென்ற பிளாஸ்டிக் பைகள், புட்டிகள், காலி மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட வன அலுவலர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி தலைவர் ஆர். பெருமாள்சாமி, பசுமைத் தாயகம் மாநில இணைச் செயலாளர் சி.பெ. சத்திரிய சேகர், பசுமைத் தாயகம் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், பசுமைத் தாயகம் ஆலோசகர்கள் ச. கு. மூர்த்தி அவர்கள். ஷேக் முகைதீன், எஸ்.எல், பரமசிவம், வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, செங்கோட்டையன், திருமுருகன் உள்பட நிர்வாகிகளும், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
Comments
Post a Comment