சாதியை பிரித்து ஆளுவதுதான் திராவிட மாடல??? - ஸ்டாலினை விளாசும் பொங்களூர் மணிகண்டன்

தமிழர்கள் ஆளக்கூடாது என்பதே திராவிட மாடல்....


பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இனம் , மொழி,பண்பாடு, கலாச்சாரம் என வேற்றுமையில் ஒற்றுமையைச் சிதைக்கிறது பாஜக என்று கேரளா சென்று முதல்வர் ஸ்டாலின் எழுதி கொடுத்ததைப் படிக்கிறார்.

அதே பன்முகம் தானே தமிழகத்திலிருப்பதை சாதி என்று தூண்டி மோதவிடுகிறார் ஸ்டாலின் .

தமிழகத்தில் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், கலை, இலக்கியம், கோவில், வழிபாடு, மதம், குலம், கூட்டம், உறவு முறைகள்  என பன்முகத்துடன்  தானே நானுறுக்கும் மேற்பட்ட சமுதாயங்கள் அவரவருக்கென தனித்துவமான வாழ்வியலோடு இருந்து தமிழர்களாக அடையாளப்படுகிறார்கள்.



இந்தியா முழுவதும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சமுதாயங்களின் அனைத்துமான பன்முகம் தானே தேசம்.

தமிழகத்தின் அனைத்துமான பன்முகம் தானே தமிழர்கள்.

தமிழர்களை தமிழர்கள் என்று அழைக்க முடியாமல் திராவிடர்கள் என்று அழைத்து தனது பூர்வீகத்தை மறைக்கும் ஸ்டாலின் ஏன்? கேரள மக்களை மட்டும் மலையாளிகளாகக் கருதி விழித்ததேன்?

எடப்பாடியார், அண்ணாமலை, அன்புமணி, சீமான் போன்ற

தமிழர்கள் தலைமைக்கு வருவதை தடுக்கும் முயற்சியே திராவிட மாடல் என்பதை தமிழர்கள் உணராதவரை ,

இந்தி எதிர்ப்பு, சனாதனம், மொழி உரிமை, இனம், திராவிடம் போன்ற பொய்மைகளை முன்னிருத்திய அரசியலைத் தவிர திமுக சாதித்தது என்ன?  


பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து பிரதமராக உயர்ந்துள்ள மோடியை வீழ்த்த ராகுல் காந்தி என்ற கலப்பு பிராமணரை பிரதமர் வேட்பாளர் என முன்னிருத்தி பிரசாந்த் கிஷோர் எனும் பீகார் பிராமணரின் ஆலோசனைப்படி எல்லாம் செய்து கொண்டு மக்களை மட்டுமே பிளவு படுத்தியே வைத்திருப்பதேன்?

சித்தாந்த அரசியலை  கேரளாவில்  வாசித்து தனக்கே வழிகாட்டி என  பினராய் விஜயனின் ஆட்சியை மெச்சிய ஸ்டாலின் கேரளாவில் ஊழல் கொஞ்சம் குறைவு  தான் என்பதை பாராட்டி இருக்கலாமே?

ஒருவேளை பினராய் விஜயனின் மருமகன் அவரது அமைச்சரவையில் கோலோச்சுவதால் குற்றமுள்ள நெஞ்சத்தோடு கடந்து சென்று விட்டாரா?

திராவிட மாடலுக்கு தமிழர் மாடல் என மார்தட்டும் காலம் தமிழர்களால் உருவாகும் காலம் வரும் போது தான் தமிழனும், தமிழகமும் உருப்படும்.

ஏமாற்றம் தொடரும்.

ஏமாற தமிழன் இருக்கும் வரை .


Comments