7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்

ஆளுனர் மாளிகையின் மாண்பைக் காக்க  
7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் 


1. பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக  தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது!

2. உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து  ஆளுனர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுனர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை  உச்சநீதிமன்றமே  விடுதலை செய்யக்கூடும்!

3. பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அது ஆளுனர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர்  உடனடியாக கையெழுத்திட வேண்டும்!

Comments