இதுவரை எந்த வெளிநாட்டிற்கும் செல்லாத முதலமைச்சர்.

சாதி பார்க்காமல் தேர்தலில் சீட்டு தருகின்ற முதலமைச்சர்.....



இவர் சாதி பார்ப்பவர் என இவரைப் பற்றி பல புனைவுகள் கூறப்படுவதுண்டு.ஆனால் இவர் அத்தகையவர் அல்லர் என்பது இவரிடம் அணுக்கமாக உள்ள மாற்று சமூகத்தவர்களின் கூற்றிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

தன் சொந்த சாதி சங்கங்களின் எத்தகைய கோரிக்கைக்கும் இதுவரையிலும் செவி சாய்க்காதவர்.

இவர் எளிமையானர் அல்லர்.மாறாக மிகவும் எளிமையானவர்.தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் ரோட்டோரம் இருக்கும் டீக்கடையில்  டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

இவர் தனக்கான முதல்வர் கான்வாயை விரும்ப மாட்டார்.மற்ற வாகனங்களைப் போன்றே இவரின் முதல்வருக்கான காரும் ட்ராபிக் சிக்னலில் நின்றே செல்லும்.




பல நேரங்களில் இவர் தனது யமகா டூவீலரில் சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணிப்பதை இயல்பாக புதுச்சேரி தெருக்களில் காணவியலும்.

எந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகை வைத்து அழைத்தாலும் தவறாமல் வந்து ஆஜராகிவிடுவார்.வாய் மொழியாக அழைத்தாலும் வந்து விடும் இயல்புடையவர்.

இவரை அலுவலகத்தில் பார்க்க வேண்டுமென்றாலும் சரி அல்லது வீட்டில் பார்க்க வேண்டுமென்றாலும் சரி முன் அனுமதி தேவையில்லை.

திருமணம் செய்து கொள்ளாதவர்.



மாநில மக்களைத் தாண்டி தன் தொகுதி மக்களின் மீது அதிகம் பரிவு கொண்டவர்.

தான் தனித்து கட்சி தொடங்கி ஆட்சி அமைத்த இரண்டு முறைகளிலும் தன் 5 அமைச்சரவை சகாக்களில் 2 பேரை தலித் சமூகத்திலிருந்தே தேர்ந்தெடுத்தவர்.

புதுச்சேரிக்கு மத்திய அரசு பல்லாண்டுகளாக மறுத்து வந்த அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி இவரின் ஆட்சிக் காலத்தில் தான் பெறப்பட்டது.

அனைத்து தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 100 சதவீத கட்டணத்தை அரசே செலுத்த ஆணை பிறப்பித்த இந்தியாவின் முதல் முதல்வரும் இவரே.

இவர் தான் புதுச்சேரியின் முதல்வர் ந.இரங்கசாமி ஆவார்.

Comments