காமராசர் என்றுமே அலங்கார மேடைப் பேச்சை விரும்பியதில்லை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழும் காமராசர் என்று பெயர் எடுத்தவர்

மக்கள் தலைவராகத் திகழ்ந்தார்-காமரார் ஒளிவிட்டுப் பிரகாசித்தார்...



காங்கிரஸ் இயக்கத்தில் மட்டுமின்றிப் பொது வாழ்விலும் தலைவர் காமராசர் ஒளிவிட்டுப் பி.காசித்தார்.இவ்விதம் பெரும்புகழ் அடைவதற்கு அவருடைய அயராத உழைப்பேதான் காரணமாகும்.தன்னலமற்ற தொண்டுதான் அவரைப் பெரும்புகழுக்கு இட்டுச் சென்றது.

காமராசர் என்றுமே அலங்கார மேடைப் பேச்சை விரும்பியதில்லை.தன்னுள்ளத்தில் தோன்ளியவைகளைத் தயங்காமல் எடுத்துரைத்து வந்தார் .எளிமையான அணுகுமுறையாக இருந்தாலும் அதன்மூலம் அனைவரின் இதயத்தையும் தொட்டுவிடும் பேராற்றல் படைத்தவராகத் திகழ்ந்தார்.

1940 -ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் பதின்மூன்றாம் நாள் வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில்தான் காந்தியடிகளின் தனிமைச் சத்தியாக்கிரகத்திற்கு முழு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அப்போது இரண்டாவது உலக போரும் தீவிரம் அடைந்தது. அந்த நேரத்தில் யுத்த எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த தனியார் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ளும் முதல் சத்தியாக்கிரகியாக ஆச்சாரியா வினோபவைக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார்.



1942 - ஆகஸ்ட் எட்டாம் நாள் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் பொதுக் குழுவில் 'வெள்ளையனே வெளியேறு 'என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்விதம் காந்தியடிகள் கூறவும், மறுநாள் - அதாவது ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் அதிகாலை நான்குமணியளவில் காந்தியடிகள் உட்படக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஆங்கிலேய அரசு கைது செய்து சிறைக்கு அனுப்பியது.காங்கிரஸ் கட்சியை ஒரு சட்ட விரோதமான கட்சியேன்றும் அறிவித்தது;அவசர காலச் சட்டத்தையும் கொண்டு வந்தது. நாடு முழுவதும் மேலும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பம்பாயிலிருந்து புறப்பட்ட சென்னை ரயிலில் தலைவர் காமராசர் மற்றும் தென்னகத் தவைவர்கள் அமர்ந்திருந்தால்கள்.தங்களுக்கு. எப்போதும் கைது ஆணை வருமோ என்று பயந்து வண்ணம் இருந்தார்கள். சிறை செல்வதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.ஆகஸ்ட் போராட்ட முயற்சிகள் பற்றித் தென்னகமெங்கும் விளக்கியுரைக்க வேண்டுமே, அதுரையிலும் கைதாகாமல் இருந்தால் நலமாக இருக்குமே என்றுதான் எண்ணிக் கொண்டுருந்தார்கள்.





ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் போலீசார் தயாராக நின்று கொண்டுருந்தார்கள். எப்படியோ தப்பித்து அரக்கோணம் ரயில் நிலையத்தை அடைந்ததும் தலைப்பாகை கட்டி கொண்டு அரக்கோணம் பேருந்து நிலையம் சென்று ராணிப்பேட்டைக்கு முதலில் சென்று அங்கு கல்யாணராம ஐயரைச் சந்தித்து அவரிடம் விஷயத்தைக் கூறிவிட்டு இருவரும் தஞ்சாவூரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள் .வழியில் திருவண்ணாமலை ரயில்நிலையத்தில் ரயில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளியாசிரியர் ஒருவரிடம் கொடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். பின்னர் விழுப்புரத்திலும் இதுபோன்று ஒரு காங்கிரஸ்காரரைச் சந்தித்து அவரிடம் ஒரு நகலைக் கொடுத்துக் காங்கிரஸ் அலுவலகத்தில் ஒப்படைக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

இவ்விதம் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி இறங்கித் தெரிந்தவர்கள் யாரிடமாவது கொடுத்து அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கொடுக்கச் சொல்லிச் சென்று கொண்டுருந்தார்கள்.

பின்னர் இருவரும் தஞ்சாவூரையடைந்தார்கள் அங்கும் காமராசர் ஒரு அப்பாவியைப் போலத் தலையில்துண்டை கட்டிக் கொண்டும் கிழிந்த ஒரு சால்வையைக் கொண்டு உடம்பைப் போர்த்தியும் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியைக் கண்டு பம்பாய் நிகழ்ச்சி பற்றிக் கூறினார்.

பின்னர் இன்னொரு ரயில்மூலம் மாலையில் திருச்சிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் இல்லத்தை அடைந்தார்கள்.

பின்னர் இருவரும் மதுரையை அடைந்தார்கள் பின்னர் பி.எஸ். குமாரசாமி ராஜாவை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்கள். பின்னர் இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.

வழியில் தலைவர் காமராசர் விருதுநகரில் இறங்கவும் கல்யாணராம ஐயர் திருநெல்வேலிக்குச் சென்றார்.



விருதுநகரில் இறங்கிய தலைவர் காமராசர் மறுநாள் காலையில், தாம் திட்டமிட்டப்படி தன்னுடைய பணியை முடித்துவிட்டதால் இனிமேல் தாமும் தம்முடைய தலைவர்களைப் போலச் சிறை செல்லவேண்டும்  என்ற எணௌணமுடன் விருதுநகர் காவல் நிலையத்திற்கு ஒரு அன்பர்மூலம் சொல்லியனுப்பினார்.

நான் என்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டேன், என்னை இப்போது கைது செய்து கொள்ளலாம்'என்று சொல்லியனுப்பவும், உடனே எழுத்தச்சன் என்ற இன்ஸ்பெக்டர் காமராசரின் இல்லத்திற்க்கு வந்து 'நீங்கள் அவசரப்பட வேண்டாம், உங்களைக் கைது செய்வதற்காக வந்த இன்ஸ்பெக்டர் இப்போது இங்கு இல்லை, அவர் அரியலூருக்குச் சென்றுள்ளார், எனவே அவர் திரும்பி வருவது வரை நீங்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் ;யாரிடமும் கூறமாட்டேன் 'என்று எவ்வுளவோ கூறியும் காமராசர் கேட்கவே இல்லை.



"என்னுடைய வேலைகள் அனைத்தையும் மூடித்துவிட்டேன், என்வே, நான் வெளியே இருப்பது முறையல்ல என்னைத் தயவு செய்து கைது செய்யுங்கள். தலைவர் அனைவரும் எக்பெர்கோ சிறையில் வாடும்போது நான் மட்டும் வீட்டில் தங்கி சுகம் அனுபவிப்பதா"என்று கூறித் தம்மை கைது செய்து அழைத்துச் செல்லக் கூறிக் தம்மை கைது செய்து அழைத்துச் செல்லக் கட்டாயப்படுத்தவும், வேறு வழியின்றிக் காமராசரைக் கைது செய்து அழைத்துச் சென்றார் அந்த இன்ஸ்பெக்டர்.
இவ்விதம் தன்னலம் இல்லாத தனிப்பெரும் தலைவராக காமராசர் திகழ்ந்து வந்தார்.



தற்போது கண்ணுக்கு எட்டிய தூரம் திராவிட கட்சிகளில் இது போன்ற தலைவர்களே இல்லை மாறாக ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழும் காமராசர் என்று பெயர் எடுத்தவர். 

Comments