RSS HINDU ARMY - ஆர்எஸ்எஸ் என்பது இந்து அமைப்பின் ராணுவம்

 ஆர்எஸ்எஸ் என்பது இந்து அமைப்பின் ராணுவம் அது இந்தியாவில் யார் பாதிக்கப்பட்டாலும் இயற்கை சீற்றம் வந்தாலும் அந்த அமைப்புஉதவும்...


"கோவையில் சில தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெறுவதாகவும், இது வன்முறை பயிற்சி என்றும், இதனை எப்படி காவல் துறை அனுமதித்தது என்றும்" திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இந்திய அரசியல் சட்டப்படி, மற்ற பொது அமைப்புகளைப் போலவே இயங்கி வரும் பேரியக்கம். 1925-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், இளம் வயது முதலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மருத்துவப் படிப்பை முடித்தும், மருத்துவராகப் பணியாற்றாமல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மகாராஷ்டிர பகுதியில் காங்கிரஸின் முக்கியத் தவைவராக இருந்தவர்.




விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, இவ்வளவு பெரிய நாடு எப்படி அடிமைப்பட்டது, அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தார். மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் விடுதலை கிடைத்தும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார். அதன் விளைவாக உருவானதுதான் ஆர்எஸ்எஸ்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், திட்டமிடப்பட்ட ஒழுங்கோடு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சில அறிவுப்பூர்வமான பயிற்சிகளை அளிப்பது ஆர்எஸ்எஸ்ஸின் தினசரி செயல்பாடாக உள்ளது. இதற்கு 'ஷாகா' என்று பெயர். இந்தப் பயிற்சியில் சூர்ய நமஸ்காரம், யோகாசனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளும், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும், பாடல் பயிற்சி, ஏதாவது ஒரு பொருள் குறித்து கலந்துரையாடல் என்று ஒரு மணி நேரம் ஷாகா நடைபெறும். இதில் எந்த ஆயுதப் பயற்சிக்கும் இடமில்லை. 96 ஆண்டுகளைக் கடந்து, 2025-ல் நூற்றாண்டு காணவுள்ள ஆர்எஸ்எஸ் ஒருபோதும் வன்முறையை ஆதரித்தது இல்லை. 

ஆர்எஸ்எஸ்ஸின் தினசரி ஷாகா பயிற்சிக்கு மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வருகை தந்து, ஜாதி பேதமற்ற ஆர்எஸ்எஸ்ஸின் அணுகுமுறையை பாராட்டியுள்ளனர். இதுவெல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஆனால், ஆர்எஸ்எஸ் பற்றி மாற்று மதத்தினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஆர்எஸ்எஸ் மீது பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.



ஆர்எஸ்எஸ் பற்றிய அவதூறுகளை மக்கள் ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை. அப்படி பொருட்படுத்தியிருந்தால் மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்திருக்க முடியாது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ் ஷாகா மூலம்  பொதுவாழ்வுக்குள் வந்தவர்கள்தான். 

கி.வீரமணி போன்ற கருப்பு சட்டையினர் திமுக வின் பேச்சாளர்கள் எனவே அவர்கள் தமிழர்களுக்கு இந்தியனுக்கோ உதவ மாட்டார்கள் மாறாக கோபாலபுரம் குடும்பத்தை தாங்கி பிடிக்கும் தான் தூன் திராவிட கழகம்.

திராவிடர் கழகத் தலைவர் கூறுவதுபோல ஆர்எஸ்எஸ் வன்முறை இயக்கமாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. எனவே, ஆர்எஸ்எஸ் பற்றிய அச்சத்தை விதைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையும் முயற்சிகளை கைவிட வேண்டும். ஏனெனில் உண்மை என்ன என்பதை மக்கள் நன்கறிவார்கள். இந்திய அரசியல் சாசனத்தின்படி இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் செயல்பட உரிமை உள்ளது.

Comments