நாரதரின் போதனையின்படி அர்ச்சுனன் அரசுஉடைகளைந்து துறவுக்குரிய உடுப்புடன் ஒரு வருட யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றான?
இந்திரப்பிரஸ்தத்தில் பஞ்சபாண்டவர்கள் நீதி நெறி தவறாது ஆட்சிபுரிந்து வந்து கொண்டிருந்தபோது நாரதர் கூறிய சோதனை ஏற்பட்டுவிட்டது.
பசுவை பறிகொடுத்த ஒரு பிராமணனுக்கு உதவி செய்வதற்க்காக வில்லையும் அம்பையும் எடுக்க தோட்டத்தின் வழியே அவசரமாக உள்ளறைக்குச் சென்றான் அர்ச்சுனன். அப்போது தர்மனுடன் தனித்திருந்த பாஞ்சாலியின் கொலுசு ஒலி அவனுக்கு கேட்டது. எதேச்சையாக திரும்பிய அவன் பார்வையில் பாஞ்சாலியின் பாதங்கள் தெரிய, தான் நியமம் தவறிவிட்டதாக உணர்ந்தான் அர்ச்சுனன். நாரதரின் போதனையின்படி அர்ச்சுனன் அரசுஉடைகளைந்து துறவுக்குரிய உடுப்புடன் ஒரு வருட யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றான்.
கங்கை நதிக்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது ஒரு நாகலோக நங்கை அர்ச்சுனன் மீது மையல்கொண்டு அவனை நாகலோகம் அழைத்துச் சென்று தனக்குப் புத்திரப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். நாரதர் போதனை பற்றிக் கூறியபோது, புத்திரப் பேற்றுக்காக அழைக்கும்போது ஆடவர் மறுப்பது பாவம் என்றுகூறி சம்மதிக்க செய்தாள்.
அர்ச்சுனனுக்கும் உலூபி என்னும் பெயரைக் கொண்ட நாகலோக கன்னிக்கும் திருமணம் முடிந்து அரவான் எனும் மகன் பிறந்தான். அதன்பின் அர்ச்சுனன் அந்தணர்களுடன் சேர்ந்து இமயமலைச் சாரலுக்கு சென்றான் .பின்னர் புண்ணிய தீர்த்தமாடி பாண்டய நாட்டுக்கு வந்தபோது சித்திராங்கதை என்ற பாண்டி நாட்டு மன்னன் மகளை மணமுடித்து அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தான். அந்த ஆண் குழந்தையை அவள் தந்தை சித்திரவாகனனிடம் கொடுத்து விட்டு ஐந்து புண்ணிய தீர்த்தங்கள் இருந்த குளத்தருகில் வந்து நின்றான்.அங்கே முதலை வடிவத்தில் இருந்த ஐந்து தேவலோகக் கன்னிகைகளைக் காப்பாற்றினான்.
அதன் பிறகு துவாரகையில் கண்ண்பிரானின் தங்கை சுபத்திரையை நினைத்துக் காதல் கொண்டான் அர்ச்சுனன்.சந்நியாச
வடிவிலேயே கண்ணனின் யோசனைப்படி சுபத்திரையை தேரில் கடத்திச்சென்று திருமணம் செய்தான் அர்ச்சுனன்.
அதன்பிறகு துறவி கோலத்தைக் களைந்துவிட்டு அரச உடை தரித்து சுபத்திரையுடன் இந்திரப்பிரஸ்தம் நோக்கிச் சென்றான் அர்ச்சுனன். இந்திரப்பிரஸ்தத்தில் கண்ணன் சீர்வரிசைகளுடன் அர்ச்சுனனை சந்திப்பதாக வழியில் விப்புருதுரவஸ் என்பவன் மூலம் தகவல் சொல்லி அனுப்பினான்.
இந்திரப்பிரஸ்தம் வந்ததும் அர்ச்சுணன் சுபத்திரையிடம்,நீயும் நானும் சேர்ந்து போனால் திரெளபதி பொறாமைப்படுவாள்.நான் முதலில் செல்கிறேன். நீ உனது வன்னியர்குலத் தினருடன் பிறகு வந்து சேர். சமயம் பார்த்து வஷயத்தைச் சொல்லி கொள்ளலாம் " என்றான்.
அதன்படியே செய்தனர் சுபத்திரையைப் பார்த்த குந்திதேவி உச்சிமுகர்ந்து வரவேற்றாள்.திரெளபதி, "அன்பு தங்கையே,உன் வரவு நல்வரவாகுக.உனக்கு நல்ல கணவன் கிடைத்து, தீர்க்க சுமங்கலியாக பெற்றுப்பெருகி பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்தினாள்.
பிறகு சமயம் பார்த்து அர்ச்சுனன் நடந்ததனைத்தும் கூறி எல்லாருடைய சம்மதமும் பெற்றான் அந்நேரம் பலராமனும் கண்ணனும் ஏராளமான ஆடை ஆபரணங்களுடனும்சீர்வரிசைகளுடனு ம் இந்திரப்பிரஸ்தம் வந்தடைந்தனர்.இந்திரப்பிரஸ்தம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.
சுபத்திரைக்கு சில நாட்களில் அபிமன்யு எனும் மகன் பிறந்தான் திரெளபதிக்கு யுதிஷ்டிரன் மூலம் பிரதிவித்தியந்தன் பிறந்தான் அடுத்த ஆண்டில் பீமனுக்கு சுதசோமன் என்பவன் பிறந்தான். அர்ச்சுனனுக்கும் திரெளபதிக்கும் பிறந்தவன் சிருவவர்மா.நகுலனுக்கு சதாந்தன் பிறந்தான். சகாதேவனுக்கு சிருதசேனன் பிறந்தான்.
பாண்டுபுத்திரர்கள் அனைவருக்கும் தெளமிய முனிவர் குருவாக இருந்து வில் வித்தை, வாள் போர்,கதைப்போர் ஆகியவற்றோடு கல்வியும் கற்றுக் கொடுத்தார்.
Comments
Post a Comment