MAHABHARATHAM - துரோணாச்சாரியார் சபதம்

முதலில் துரியோதனன், கர்ணன்,விகர்ணன்,துச்சாதனன் ஆகியோர் துருபத நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கடும் போர் புரிந்தனர்



துருபத மகாராஜன் அரண்மனையில் தனக்கு ஏற்ப்பட்ட அவமானம் இடையறாது நினைவுக்கு வந்து துரோணரை இம்சித்துக் கொண்டிருந்ததால் பல நாட்கள் துயில் கொள்ளாதிருந்து வ
ந்தார் அவர்.

தம்முடைய சீடர்களாகிய கெளரவ-பாண்டவர்களை ஒருநாள் அழைத்து"சீடர்களே, இப்போது உங்களிடம் குருநாதராகிய நான் குருதட்சணையாக ஒன்று கேட்கப் போகிறேன். அதனை கொடுப்பீர்களா? என்று துரோணர் கேட்டார்.

"தயக்கமின்றி எதுவாயினும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் " என்றார்கள் அவர்கள் எல்லாரும்.

துரோணருக்கு அவர்கள் அப்படி உற்சாகம் பொங்கக் கூறியது கேட்டு நம்பிக்கையுடன் அவர்களிடம் துருபத மகாராஜனுக்கும் தனக்கும் இடையேயான உறவையும்,தனக்கு அவனது அரண்மனையில் நிகழ்ந்த அவமானத்தையும் எடுத்துக் கூறினார்.





"சீடர்களே, நீங்கள் அந்தப் பாஞ்சால மன்னன் துருபதனைப் போரில் வென்று என்னிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும்.அதுவே உங்களிடம் நான் கேட்கும் குருதட்சணை " என்றார் துரோணர்.

முதலில் துரியோதனன், கர்ணன்,விகர்ணன்,துச்சாதனன் ஆகியோர் துருபத நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கடும் போர் புரிந்தனர்.கடைசியில் அர்ச்சுனன் துருபதனைப் பிடித்து வந்த ஆச்சாரியரின் காலடியில் விழச்செய்தான்.

துரோணர் தமது காலடியில் விழுந்த துருபதனுக்குப் பழைய சம்பவங்களை நினைவு படுத்தினார்.

"ஏழைக்கும் மன்னனுக்கும் நட்பு இருக்க முடியாது என்று அன்று கூறினியே ..நீ அரசன் ஆனதும் உன் நாட்டில் பாதியைக் கேட்டா அன்று நான் வந்தேன்?  என் குழந்தைக்குப் பாலில்லித வறுமை போக்கத்தானே வந்தேன். ஆனால், நீ சம அந்தஸ்து இருந்தால்தானே நாம் நண்பர்களாக இருக்க முடியும் என்று கூறினாய் உன்னுடைய பாஞ்சால நாட்டை நான் முழுமையாக வென்று விட்டேன். இப்போது அதில் பாதி நாட்டை உனக்கு தருகிறேன்.நீயும் நானும் இப்போது சம அந்தஸ்தில்தான் இருக்கிறோம் போய் வா " என்றார் துரோணர்.

வெட்கித் தலைகுனிந்து சென்ற துருபதன் எப்படியும் துரோணரையும் அர்ச்சுனனையும் பழிவாங்கவேண்டும் என்று கங்கணம் செய்து கொண்டான்.




புஜபலம் மிகுந்த துரோணரை சாதரணமாக போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துகொண்ட துருபதன் துரோரை வெல்வதற்கு செளத்ராமணி என்ற கேள்வியை நடத்தினான் 

அந்த கேள்வித்தீயிலிருந்து அக்கி போன்று முகமும் பயப்படத்தக்க உருவமும் கொண்ட கத்தி,வில்,அம்பு,கவசம் ஆகியவற்றுன் ஒரு ஆண்மகன் தோன்றினான்.

அப்போது ஒரு அசரீரி எழுந்து,

இவன் துரோணரின் சீடனாக வளர்ந்து அவருக்கே யமனாக மாறுவான்.இவனால் பாஞ்சல தேசம் புகழ் பெறும்' என்று ஒலித்தது.

அதன்பின்பு மீண்டும் மந்திரம் கூறி அக்கினியில் அவிர் சொரிந்தபோது யாகக் குண்டத்தின் நடுவிலிருந்து கரிய மேனியுடன் கூடிய அழகும்,தாமரை இதழ்கள் போன்ற கண்களும் கொண்டு ஒரு பெண் எழுந்து வந்தாள்.

அரசகுலத்திற்கே படு நாசம் விளைவிக்கப் போகும் பாஞ்சாலி இவளே என்று கூறியது அசரீரி.





துருபதனும் மக்களும் அதனைக் கேட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.ஆணுக்கு திஷ்டத்துய்மன் என்று பெண்ணுக்கு திரெளபதி என்று பெயரிட்டனர்.

திஷ்டத்துய்மன் துரோணரிடம் சீடனாக சேர்ந்தான். துரோணர் தமது ஞானதிருஷ்டியால் திஷ்டத்துய்மனைத் தெரிந்துகொண்ட போதிலும், எதிரி என்று எண்ணி எதையும் மறைக்ககாமல் தனுர்வேதத்தை நன்றாக உபதேசித்தார்.

அஸ்தினாபுரத்தின் இளவரசனாக யுதிஷ்டிரனுக்குப் பட்டம் சூட்டினார்கள். இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்தவன் துரியோதனனே.தன்னுடைய தந்தை திருதராஷ்டிரனிடம் சண்டையிட்டு அவர் மனதில் விஷத்தை ஊற்றினான். அதற்கு ஏற்றாற்போல சகுனிமாமனும் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களைப் பற்றி எப்போதும் குற்றம் கூறிவந்தான்.

பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து பிரித்து வாரணாவதத்திற்கு அனுப்பிவைத்துவிட்டால் அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று சகுனி திட்டம் வகுத்துக் கொடுத்தான்.



வாரணாவதம் நகருக்குப் பாண்டவர்களை ஓய்வெடுக்கச் செல்லும்படி தன்னுடைய தந்தை திருதராஷ்டிரன் சொன்னால்தான் பாண்டவர்கள் போவார்கள் என்று துரியோதனன் தந்தையிடம் கூற அவரும் பாதிமனதுடன் பாண்டவர்களை அழைத்து "வாரணாவதம் நகரில் சிவபெருமானுக்குத் திருவிழா நடக்கிறது. இந்த நேரம் அந்நகரில் போய்த் தங்கி இருந்தால் ஓய்வும் சந்தோஷமும் கிட்டும்.என்று கூறினார்.

பாண்டவர்களும் பெரிய தந்தையின் பேச்சும் மறுப்பின்றி வாரணவாதம் நகருக்குச் செல்ல சம்மதித்து சென்றனர். வாரணவாதம் நகரில் பாண்டவர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்பதை சங்கதே மொழியில் விதுரன் யுதிஷ்யுதிஷ்டிரனிடம் சொல்லி அனுப்பினான்.

"காடுகளையே எரித்துச் சாம்பலாக்கும் அக்கினியால் நிலவளைப் பொந்துகளில் வசிக்கும் எலிகளைக் கொண்றுவிட முடியாது. விழிப்பும் முயற்ச்சியும் எதிரியை முறியடிக்கும்.முள்ளம்பன்றி காட்டுத்தீக்குப் பயந்து முன் கூட்டியே சுரங்கம் தோண்டீவிடும் காலிலும் தலையிலும் பலமுள்ள வனுக்கு எத்தனையோ வழிகள் திறந்திருக்கும்" என்று விதுரன் கூறியது யுதிஷ்டிரனுக்கு புரியவில்லை.

Comments