மூன்று நாட்கள் விடாத மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தை எட்டிப்பார்காத இன்றைய முதல்வர்!!
சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் உள்ளது.என்று தமிழாகத்தில் உள்ள அனைத்து விவசாயப் பெருமக்களும் நிம்மதிப் பெருமூச்சி விட்டு, முழு ஈடுபாட்டுடன் விவசாய பணிகளை செய்து நேல் பயிர்கள், சம்பா நெல் பயிர்கள் இன்னும் 15 நாட்கள் முதல் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்
ஏற்கனவே குறுவை சாகுபடி மேற்கொண்டு, தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழையினால், டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேரில் பார்வையிட்டு, வேளாண் பெருமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி பாதிப்புகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் அரசு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவில்லை,மாறாக விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்து பயிராகிவிட்டது விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாயினர்.மேலும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சரியான முறையில் பாதுகாப்பாக வைக்க தவறியதால் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளது என்று செய்திகள் வந்துள்ளன. நேற்று கூட கும்பகோணத்தில் பெய்த கனமழையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருந்த சுமார் 10,000 நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க தவறிய இந்த செயல்படாத திமுக அரசின் மெத்தனப் போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்.
தற்போது பெய்த கனமழையினால் பாதிப்படைந்த விவசாயிகளின் துயரத்தை போக்கும் வகையில் இந்த அரசு உடடினடியாக வேளாண்துறை அதிகாரிகாரிகள் குழுவை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக அனுப்பி பாதிப்புகளை மதிப்பிட்டு உடடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, தேவைப்படும் இடங்களில் உடனடியாக திறக்க வேண்டும் என்று இந்த அரசை வற்புறுத்துகிறேன்.
அம்மா அரசு ஆட்சி புரிந்தபோது,புயல், மழையினால் சேதமடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியுதவி வரும் வரை காத்திராமல் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.ஆனால், கடந்த தென்மேற்கு பருவ மழையில்,குறுவை சாகுபடியின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த விடியாத அரசு இதுவரை நிவாரண உதவிகளை வழங்கவில்லை. தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில், காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக ஏற்ப்பட்ட புயல் மற்றும் கன மழையினால் பாதிப்படைந்த விவசாய பெருமக்களுக்கும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. தொடர்ந்து இரண்டு பருவமழைக் காலங்களிலும் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
எனவே இனியும் மத்திய அரசு புயல் நிவாரண நிதி வழங்கவில்லை என்று பழியை தூக்கி மத்திய அரசின் மீது போட்டு தப்பித்து கொள்ளாமல், ஏற்கெனவே எனது அறிக்கையில் வலியுறுத்தியவாறு முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டோருக்கு ரூ. 20,000/- என்று அறிவித்துள்ளதை உயர்த்தி ஹெக்டோருக்கு 40,000/- ரூபாயாகவும்,நெற்பயிர் மறு சாகுபடி செலவு ஹெக்டேருக்கு ரூ. 6038/- என்று அறிவித்துள்ளதை 12,000/- உயர்த்தி, ஏற்கனவே அதிகாரிகள் கணக்கெடுத்துள்ள நிலப்பரப்புக்கு ஏற்றவாறு நிவாரணத் தொகையை உயர்த்தி பாதிப்படைந்துள்ள விவசாயப் பெருமக்களுக்கு மாநில நிதியைக் கொண்டு உடனடியாக இரண்டு பருவமழைக் காலங்களிலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும்.என்று வலியுறுத்தினார், மேலும்,பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையினை உடனடியாக பெற்றுதர வேண்டும்.
Comments
Post a Comment