தமிழர்களுக்கு தயிர் வகைகள் இல்லாத உணவே இருக்காது.
பசுவின் தயிர்:
பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துப் பின்னர் உறைவிட்டுத் தயிராக்கினால் இந்தத் தயிர் உடலுக்குச் சொல்ல முடியாத நன்மைகளைத் தருவதாகும். இத்தயிரைச் சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல பசியுண்டாகும்.தாகம்,களைப்பு இவை நீக்கி புத்துணர்வுடன் நமது உடல் பொலிவுடன் திகழும்.
ஆடையெடுக்கப்பட்ட பசுவின் தயிரால் களைப்பு நீங்குவதோடு வாத நோய் குணமடையும் :கொடிய நோய்களில் ஒன்றான குஷ்டரோகம் கூடக் குணமடையும்.
எருமை தயிர்:
எருமைப் பாலையும் நன்கு காய்ச்சி ஆற வைத்து உறை ஊற்றினால் தயிராக்கினால் பசுவின் தயிரைப் போன்ற நன்மைகளை பெற முடியாது. பித்த நோயைக் குணப்படுத்தம் ஆற்றல் இந்த எருமை தயிருக்கு இருந்தாலும், புத்தி மந்தம் ஏற்ப்படும்.வாத நோயை உண்டாக்கும். எனவே, எருமை தயிரால் நன்மைகளை விடவும்.
தீமைகளே அதிகம் விளைவதால் இந்தத் தயிரை உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.தவறு என்று தெரிந்த பிறகும் இதைப் பருகுவது தவறாகும். எனவே, முடிந்த வரையில் எருமைத் தயிரை உணவுடன் கலந்து சாப்பிட லேண்டாம்.
வெள்ளாட்டின் தயிர்:
வெள்ளாட்டின் பாலைப் பற்றி நாம் பார்க்கும்போது அது சிறப்பு தன்மையுள்ளது என்பதை அறிந்தோம். ஆனால் வெள்ளாட்டின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துத் தயிராக்கினால் அதன் பலன் நன்றாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.வெள்ளாட்டின் தயிர்,உடலுக்கு அதிக சூட்டை அளிப்பதோடு புத்தியும் மந்த நிலையை அடையச் செய்யும்.எனவே, வெள்ளாட்டின் தயிரை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
ஆனால் இதே வெள்ளாட்டின் தயிரை கடைந்து மோராக்கினால் சிறு நன்மை விளையும்.மேக நோயைப் போக்கும் தன்மை இந்த வெள்ளாட்டு மோருக்கு உண்டு. எனவே, மோராக மட்டும் உபயோகிக்கலாம்.
செம்மறியாட்டுத் தயிர்:
செம்மறியாட்டின் பாலைப் பற்றி பார்க்கும்போதே இது உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்பதை கண்டோம்.இதைபோல இதன் தயிரும் உடலுக்குத் தீங்கையே தருவதாகும்.கரப்பான், மூலக்கடுப்பு,ரத்த மூலம்,வாத நோய் ஆகியவை இந்த தயிரால் ஏற்படும்.எனவே எந்த காரணம் கொண்டும் செம்மறியாட்டின் பாலைத் தயிராக்கும் முயற்ச்சி வேண்டாம்.
பசு மோர்:
வயிற்று வலி,வீக்கம், மகோதரம்,பாண்டு நோய், பித்த நோய்,பேதியாதல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அபார சக்தி பசுவின் மோருக்கு உண்டு. உப்பைக் கலக்காமல் பருகுவது அதிக நன்மையைத் தரும்.
Comments
Post a Comment