தலைவர் காமராசர் சிறையில் இருந்தபோது தான் விருதுநகர் நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்....
1922 ஆம் ஆண்டு சாத்தூர் தாலுக்க காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புத் தலைவராகச் செயல்பட்டார்.அதற்கு முன்னரே விருதுப்பட்டியில் பல கூட்டங்களை நடத்துவதற்குக் காரணமாக இருந்தார்.
1923 - ஆம் ஆண்டு மது ஒழிப்பில் அதிக அக்கறையுடன் செயல்பட்டார். அதே ஆண்டில் நாகபுரியில் நடைபெற்ற கொடிப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். தமிழகத்திலிருந்து கொடி போராட்டத்திற்காகப் போராட்ட வீரர்களைத் திரட்டியனுப்பியதோடு தாமும் கலந்து கொள்ளக் காமராசர் நாகபுரிக்குச் சென்றார்.அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது.
1926 -ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.அப்போது அவருடைய அரசியல் ஆசானாகச் சத்திய மூர்த்தி திகழ்ந்தார். அவருடைய தலைமையில் காமராசர் தீவிரப் பிரசாரம் செய்து காங்கிரஸ் வெற்றிக்காகப் பாடுபட்டார்.
ஜெனரல் நீஸ் என்ற ஆங்கிலேயக் கொடுமைக்காரரின் சிலையை அகற்றும் போராட்டத்திலும் காமராசர் தீவிரமாக ஈடுபட்டார்.
அப்போது ஆங்கிலேயர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
1928-ஆம் ஆண்டு சார் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியாவுக்கு வந்தது சைமன் கமிஷனைப் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது."சைமனே திரும்பிப் போ" என்ற முழக்கம் எங்கும் எதிரோலித்தது.
பண்டித நேரு, தாக்கப்பட்டார். பஞ்சாப் சிங்கம் என்று பெயர்பெற்ற லாலா லஜபதிராய் தலையில் அடிப்பட்டு மரணமடைந்தார்.
சென்னை கவர்னர் ஆர்தர் ஹோம் என்பார் இரண்டாம் உலகப் போருக்காக நாட்டில் யுத்த நிதி வசூல் செய்வதில் முனைந்தார். அதற்குத் தமிழ்நாட்டிலுள்ள பதவிப் பித்தர்கள் பணம் கொடுத்துத் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்கள் ;உயர் பதவிகளிலிருந்தோர் தங்களுக்கு மேலும் பதவி உயர்வு கிடைக்கும் என்று கற்பனை செய்து பணத்தைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள்.
இவ்விதம் யுத்த நிதி கொடுத்து வந்ததைத் தலைவர் காமராசர் எதிர்த்தார்.கொடுக்கக் கூடாது என்று நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து நிதி கொடுப்பதைத் தடை செய்யும் முயற்சியில் இறங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு தலைவர் காமராசரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது.
விருதுநகர் நகரசபைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.அப்பொழுது தலைவர் காமராசர் சிறையில் இருந்தாலும் அவரையே நகரசபைத் தலைவராகக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார்கள். தொண்ர்களின் பெருமுயற்சியில் தலைவர் காமராசர் விருதுநகர் நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் காமராசர் சிறையில் இருந்து வந்ததால் துணைத் தலைவரே தலைவரின் பணியை ஏற்று அனைவரும் பாராட்டும்.வண்ணம் செய்ல்பட்டு வந்தார்.
இவ்விதம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது 1942 மார்ச் மாதம் பதினாறாம் தேதி விருதுநகர் நகரசபைக் கூட்டம் நடைபெற்று வந்தபோது திடீரென்று தலைவர் காமராசர் அந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டார்.தலைவரின் வருகை அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. அனைவரும் ஆரவாரமுடன் வரவேற்று மகிழ்தார்கள்.
தலைவர் காமராசர், நகரசபைத் தலைவர் என்ற முறையில் தன் ஆசனத்தில் அமந்து சிறிது நேரம் நகரசபை அலுவல்களைக் கவனித்து வந்தார்.
பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.தாம் சிறையில் இருந்து போதும்,தம்மைத் தேர்ந்தெடுத்தது பற்றித் தம் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
ஒரு நகரசபைத் தலைவராக இருந்து ஆற்றும் பணிகளை விடவும் தமக்கு நிறையவே பணிகள் உள்ளன என்றும்,எனவே அந்த பணிகளை ஆற்றவேண்டுமானால் நகரசபைத் தலைவராக இருக்கமுடியாது என்றும், எனவே தன்னுடைய ராஜினாமாவை. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய தலைவர் நகரசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அனைவரிடமிருந்தும் விடைபெற்றுச் சென்றார்.
இதை போலத்தான் வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்ட தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் சிறையில் இருந்து போதுதான் கல்கத்தா மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் காமராசர் சிறையில் இருந்தபோது தான் விருதுநகர் நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஏறக்கு றைய ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த வண்ணம் நகரசபைத் தலைவராகவும் பதவு வகித்து வந்தார்.நகரசபைத் தலைவர் என்ற பதவி இருந்ததே தவிர அப்போது அவர் சிறையில்தான் இருந்தார்.
நகரசபைத் தலைவர் பதவி ஒரு கெளரவப் பதவியாக இருந்தாலும் கூட அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யவேண்டும், இல்லையேல் அந்த பதவியில் இருக்கக் கூடாது என்பதுதான் தலைவர் காமராசரின் கொள்கையாகும். எனவேதான் நகரசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரை எதிர்நோக்கியிருந்த முக்கிய பணிகளில் தம் கவனத்தைச் செலுத்தினார்.
ReplyForward |
Comments
Post a Comment