"பொய்ச் செய்திகள்: கொரடூரமானவை, ஆபத்தானவை! ஒருபோதும் நம்பாதீர், பரப்பாதீர்!"

 சமூக ஊடகங்கள் வருகைக்கு பின்னர் பொய்ச்செய்திகள் பன்மடங்கு அதிகமாகிவிட்டன....



உண்மைக்கு புறம்பான பொய்ச்செய்திகள், கட்டுக்கதைகள் அனைத்தும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. பொய்ச்செய்திகளில் நமக்கு ஆதரவானவை, நமக்கு எதிரானவை என்று எதுவும் இல்லை. எல்லாமும் மோசமானவை. அனைத்து பொய்ச்செய்திகளும் இருபுறமும் குத்தும் வாள் போன்றவை.
ஒரு சாதாரண பொய்ச்செய்தியை பகிரும்/நம்பும் பழக்கம் தான் பின்னர் – மிக மோசமான ஆபத்தான பொய்ச்செய்திகளையும் பகிரும் ‘மனநோயை’ உருவாக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்கள் வருகைக்கு பின்னர் பொய்ச்செய்திகள் பன்மடங்கு அதிகமாகிவிட்டன. MIT ஆய்வின் படி, டிவிட்டரில் உண்மை செய்தியை விட பொய்ச்செய்திகள் 6 மடங்கு அதிக வேகத்தில் பரவுவதாக கண்டறியப்பட்டது. மேலும், பொய் சென்று சேர்ந்த நபர்களிடம் அதற்கு மாறான உண்மை சென்று சேர்வதே இல்லை.
அண்மையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முகநூல் ஆய்வறிக்கையில், நல்ல செய்திகளை முகநூல் அதிக நபர்களுக்கு கொண்டு சேர்க்காது. தீங்கு செய்யும் வெறுப்பு செய்திகளை மட்டுமே பலமடங்கு கொண்டு சேர்க்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.




ஆபத்தான பொய்ச்செய்திகள் மூன்று தளங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்:
1. வெறுப்பு பேச்சாக தொடங்கி, பெரும் இனப்படுகொலைக்கு பொய்ச்செய்தி இட்டுச்செல்லும். (எடுத்துக்காட்டு: சமூகங்கள், மதங்கள் பற்றிய கட்டுக்கதைகள்)
2. புவிவெப்பமடைவதை தடுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொய்ச்செய்திகள் தடையை ஏற்படுத்தும் (எடுத்துக்காட்டு: காலநிலை மாற்றமே இல்லை என்று மறுக்கும் கட்டுக்கதைகள்)
3. உடல்நலத்துக்கு தீங்கான, உயிருக்கே ஆபத்தான மருத்துவ விபரீதங்களை பொய்ச்செய்தி உருவாக்கும் (எடுத்துக்காட்டு: கொரோனா தடுப்பூசி சர்வதேச சதி என்று சொல்லும் கட்டுக்கதைகள்)
- இவை மூன்றும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே தீங்கானவை ஆகும்.
தயவு செய்து பொய் செய்திகளை நம்பாதீர், பரப்பாதீர்!


குறிப்பு: தமிழ்நாட்டில் பொய் செய்தியால், கட்டுக்கதைகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொய் செய்தியில் சாதி, மதம், மொழி, அரசியல், நம்பிக்கை என்கிற எதுவும் கிடையாது. எல்லா பொய் செய்திகளும் ஆபத்தானவை. பொய்ச்செய்தி (Fake News), வெறுப்பு பேச்சு (Hate Speech) - இவை இரண்டையும் முழுமையாக எதிர்க்க வேண்டும்.

Comments