காமராஜ் என்ற தமிழ் முதல்வர் பிறந்தது ...
1903 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும்.இந்த ஆண்டில்தான் ரைட் சகோதர்கள் தங்கள் ஆகாய விமானத்தை வெள்ளோட்டம் விட்டார்கள்.
இந்த ஆண்டில்தான் இந்திய காங்கிரசின் பத்தொன்பதாவது மாநாடு தமிழகத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மையார் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆம் 1903 ஜீலை பதினைந்தாம் நாள்தான் காமராசர் பிறந்தார்.
விருதுப்பட்டி என்று அப்போது அழைக்கப்பெற்ற அந்த ஊரிலே ஒரு சாதரண குடும்பத்திலே பிறந்து அந்த பிள்ளைதான் பின்னர் தமிழகச் சரித்திரத்தையே மாற்றி எழுதக் காரணமாக திகழ்ந்தார்.
ஆறு வயதில் தந்தையை இழந்த காமராசர் ஆறாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர் அவருடைய தாய்மாமாவின் துணிக்கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். தந்தையார் இறந்த பின்னர் தாயாரைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் பொதுவாகப் பிள்ளைகள் விரும்புவார்கள்;அந்த முயற்ச்சியில் தான் தீவிரமாக ஈடுபடுவார்கள் ஆனால், காமராசரோ தாய் நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் இளமையிலேயே தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த விடுதலை இயக்கத்தில் ஒரு எளிய தொண்டராகத்தான் காமராசர் சேர்ந்தார்.நாம் ஒரு சாதாரண தொண்டர்தானே என்று எண்ணியவராய் அமைதியாக இருக்கவில்லை, இரவு பகல் என்று பாராமல் உழைத்து வந்தார் ;ஆம், அவர் காந்தியத்தைப் பரப்புவதில் கருத்துடன் செயல்பட்டார்.காடென்றும் மேடேன்றும் அவர் பார்க்கவில்லை. பட்டிதொட்டிகளில் எல்லாம் சென்று மிரட்டிக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று துணிந்து செயலாற்றினார்.
காமாட்சி என்பதுதான் இவருக்குப் பெற்றோர் இட்ட பெயராகும் ராஜா என்று செல்லமாகக் குழந்தைகளை அழைப்பது வழக்கம். காமாட்சியுடன் ராஜா என்பதையும் சேர்த்துக் "காமராஜா " "காமாட்சி ராஜா என்று அழைத்து வந்தார்கள்.
"காமாட்சி ராஜா என்று அழைத்து அழைத்து நாளடைவில் காமராஜ் " என்று மருவிவிட்டது என்று கூறலாம்.இவ்விதம்தான் காமராஜ் என்ற பெயர் நிலைக்க ஆரம்பித்தது.
Comments
Post a Comment