விளாம்பழத்தின் இனிய மணத்தையும் ருசியையும் அனுபவித்தறியாத மக்களே இருக்க மாட்டார்கள்........
விளாம்பழத்தின் இனிய மணத்தையும் ருசியையும் அனுபவித்தறியாத மக்களே இருக்க மாட்டார்கள்.
விளாம்பழத்தின் அமைப்பே விசித்திரமானதாகும். பாதுகாப்பான ஓடு கவசமாக அமைந்திருக்க அந்த ஓட்டு கவசத்தின் உட்புறம் பழம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.
விளாம்பழத்தின் அமைப்பு இறைவனின் சிருஷ்டி வினோதங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.
நம்மில்பலர் விளாம்பழத்தினைச் சாப்பிட்டு அதன் ரூசியை அனுபவித்திருப்பார்கள். ஆனால் பெரும்பான்மையினரான மக்களுக்கு விளாம்பழத்தில் அடங்கியுள்ள சத்து பொருள்கள், மற்றும் அதன் மருத்துவப்பயன் போன்றவை பற்றிச் சரியாக தெரிந்திருக்க முடியாது
தமிழகத்தின் தொன்மைவாய்ந்த பழமரங்களில் விளாமரம் ஒன்றாகும்.
இது ரூட்டேசி என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.அதே குடும்பத்தைச் சேர்ந்தவை தான் எலுமிச்சை, வில்வம்,பப்ளிமாஸ் என்னும் பழமரங்களாகும்.
விளாமரங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.பெரிய பெரிய பழங்களை உற்பத்தி செய்யும் மரங்ள் ஒருவகை. சிறிய வகை பழங்களை உற்பத்தி செய்யும் மரங்கள் மற்றோரு வகை.
பெரியவகைப் பழங்களில் இனிப்புச் சுவை மிக அதிகமாக இருக்கும்.
சிறியவகைப் பழங்கள் அதிகமான புளிப்புச் சுவை மிக்கவையாக திகழும்.
ஆனால் மருத்துவப் பயனை பொறுத்த மட்டில் இரண்டு வகைப்பழங்களுமே பயன்தரக் கூடியவையாகும்.
நல்ல மணம் தரக்கூடியதாக விளங்குகிறது விளாமரத்தின் இலை.
உடல் வெப்பம் பாதுகாப்பு
விளா இலைக்கு மருத்துவச்சிறப்பும் உண்டு.உடலின் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே இறங்குவது அபாயகரமான விளைவுகளை உண்டாக்கும். அந்த மாதிரி சமயங்களில் விளாமரத்தின் இலைகளை நீரி லிட்டுக் கொதிக்கவிட்டு அதன் ஆவியைப் பிடித்தால் உடல் சூடு மேம்படும்.
இதே மாதிரி நடைமுறையைக் கையாண்டால் உடலில் ஏற்பட்டிருக்கும் வாயுப்பிடிப்புகளும் அகலும்.
உதிரப்போக்கு
மணமூட்டும் இயல்பு விளாம்பழத்துக்கு உண்டு.
மற்றும் உத்ரப்போக்கை நிறுத்தும் இயல்பும் உண்டு. சொறி, கரப்பான் போன்றவற்றையும் இது குணமாக்கும். பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும்.
பழத்தின் சத்துக்கள்
விளாம்பழத்தின் சதை பகுதியில் உள்ள விதைகளை அகற்றி விட்டு அதை கொண்டு சர்பத்,ஜாம் போன்றவற்றைத் தயார் செய்யலாம்.பழத்தையைக் கூழ் போன்று அரைத்தால் அந்தக் கூழில் சிட்ரிக் அமிலம் கணிசமான அளவு இருக்கும்.
பழத்தின் சதைப் பகுதியில் புரதச் சத்து 7.3 சதவீதம், கார்போ ஹட்ரேட் 15.5 சத விகிதமும், தாது உப்புகளும்,வைட்டமின் பி.2வைட்டமின், சி,ஆகியவை 1.9 சதவிதமும் அமைந்துள்ளன.
உமிழ்நீர் சுரத்தல்
பித்த கோளாறு காரணமாக வாயில் அளவுக்கு மீறி உமிழ்நீர் சுரத்தல், தொண்டையில் ஏற்படும் புண் ஆகியவற்றை விளாம்பழத்தை சாப்பிடுவதன் மூலமே குணப்படுத்திக் கொள்ள முடியும்.
பித்த மயக்கம்
பித்தமயக்கம்,தொண்டை தொடர்பான பிணிகள், அஜீரணம் போன்றவை குணமாக வேண்டுமானால் பழத்தின் சதையுடன் திப்பிலியையும் மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
கல்லீரல் நோய்
கல்லீரலின் இயக்கம் சீர்கெடும் போது பசிமந்தமாக இருக்கும் நிலை ஏற்படும். மயக்கமாக இருக்கும். அஜீரணம் தலைகாட்டும்.வாந்தி ஏற்படும்.
இந்த மாதிரிக் குறைபாடுகள் நமது உடலில் காணப்படும் போது விளாமரத்தின் இளந்தளிர்களைக் கொண்டு இடித்து சாறு எடுத்து ஓர் அவுன்ஸ் சாறை பசுவின் பாலில் கலந்து கொடுத்தால் மிகவும் விரைவாகப் பயன் ஏற்படும்.
Comments
Post a Comment