மலைத்தேன் உடலுக்கு நன்மைகள் பலவற்றைச் செய்கிறது

மரங்களிலுள்ள கொம்புகளில் கூடுகட்டுவதன் மூலம் கிடைக்கும் தேனும் நன்மை தருவதாகும்.உடலுக்கு நல்ல பொலிவையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருவதாகும்


 
தேன் என்றால் பொதுவாக நமக்கு தெரிவதெல்லாம் மலைத் தேனும் கொம்புத்தேனுதான். இப்போது வீடுகளில் தோட்டங்களில் செயற்கைத் தேன் கூடு வைத்தும் தேன் எடுக்கிறார்கள்.

மலைத்தேன் உடலுக்கு நன்மைகள் பலவற்றைச் செய்கிறது.கடுமையான காய்ச்சலையும்,மற்றும் விக்கல்,தேகக் கடுப்பு இவைகளையும் போக்கும் ஆற்றல் பெற்றதாகும். மரங்களிலுள்ள கொம்புகளில் கூடுகட்டுவதன் மூலம் கிடைக்கும் தேனும் நன்மை தருவதாகும்.உடலுக்கு நல்ல பொலிவையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருவதாகும்.




மரப் பொந்துகளிலும் தேனீக்கள் கூடுகட்டி வாழும்.இந்த மரப் பொந்திலிருந்து கிடைக்கும் தேன் பலவித விக்கல்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.இருமல்,காசநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும் தன்மை இந்த மரப்பொந்து தேனுக்கு உண்டு.

சில இடங்களில் தேனிக்கள், புற்றிலும் கூடுகட்டித் தேனைச் சேர்த்து வைக்கும்.இவ்வாறு,புற்றில் கட்டப்படும் தேன் கூட்டிலுள்ள தேனுக்கு கப நோய்களையும்,இருமல், இழுப்பு போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மையுண்டு.வீடுகளில் கட்டுகின்ற தேன் கூடுகளில் உற்பத்தியாகும் தேனுக்கும் சில நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உண்டு. கரப்பான் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மலைத் தேனுக்கும் உண்டு.காசநோயையும் இது குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

புதிய தேனும் பழைய தேனும்







தேனை எடுத்து அதை நாள் பட வைத்திருந்து புளிப்புச்சுவை ஏற்படவிடக்கூடாது.புதிய தேன் தான் நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. புத்தம் புதிய தேனை உண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.தேகத்திற்கு வேண்டிய சூட்டைத் தருவதுடன் உடலைப் பொலிவுடன் வைப்பதற்கு இந்த தேன் உதவுகிறது.

பழைய - நாள்பட்ட தேனானது நன்மை செய்வதற்குப் பதிலாகத் தீமையையே செய்யும்.வாத நோயை உண்டு பண்ணவும் செய்யும். மேலும் இந்த பழைய தேனால் மருந்தின் தன்மையும் கெட்டுப் போகும்.



Comments