பொன்னாங்கண்ணிக் கீரை - புளிச்சைக் கீரை

இந்த கீரையைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல்  நல்ல சிவப்பு நிறத்தைப் பெறும்


பொன்னாங்கண்ணிக் கீரை



கீரை வகைகளில் இந்தக் கீரைக்கு உயர்ந்த இடம் உண்டு. உடல் வளர்ச்சிக்கு இது ஆக்கபூர்வமான பலனைத் தருகிறது.நோய்ப்படுக்கையில் நீண்ட நாள்கள் இருந்து நோய் நீங்கப் பெற்றவர்களின் உடல் தேறுவதற்கு அருமையான டானிக் போல இது உதவுகிறது.

இளம் பெண்கள் பொன்னாங்கண்ணிக் கீரையைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் அவர்களுடைய உடல் கவர்ச்சிகரமான நிறத்தைப் பெறும். 

கறுத்த உடல் நிறம் உள்ள பெண்கள், இந்த கீரையைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல்  நல்ல சிவப்பு நிறத்தைப் பெறும்.




இவ்வாறு இது உடல் நிறத்தை மெருகேற்றும் ஆற்றல் பெற்றது என்பதைக் குறிக்கும் நோக்கத்துடன்தான் நமது முன்னோர் இதற்குப்'பொன் ஆம் கானீர்' எனப் பெயர் சூட்டினர்.இந்த பெயர்தான் பின்னர் பொன்னாங்கண்ணி" என மாறி விட்டது.

இந்த கீரையை பருப்புடன் சேர்த்துக் குழம்பு தயாரிக்கலாம்.கடைந்து கூட்டு போலவும் செய்யலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை உடல் உஷ்ணம் அதிகப்படாமல் சம நிலையில் வைக்கும் ஆற்றல் பெற்றது.கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளையும் இது அகற்றும்.


புளிச்சைக் கீரை




ஆந்திரப் பி.தேச தேசியக் கீரை என்றுகூட இதனைக் கூறலாம். அந்த அளவுக்கு இந்த கீரையை ஆந்திர மக்கள் அதிக அளவில் உணவோடு சேர்த்துக் கொள்கின்றனர்.நமது நாட்டிலும் இது அதிக அளவு உணவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

புளிச்ச கீரையில் கணிசமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பலவிதமான வைட்டமின் சத்துகளும் உள்ளது.

சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை இது நீக்கும்.நீண்ட காலம் ஆறாமல் இருக்கும் ரணத்தை ஆற்றும்.வாதக் கோளாறுகளை நீக்கும்.நோய் காரணமாக வாய் ருசியறியாத நிலை ஏற்படும்போது,இந்தக் கீரையைத் துவையலாக கரைத்து உணவோடு சேர்த்து உண்டால் நாக்கு ருசி இயற்க்கை நிலைக்கு வரும்.

உடல் சூட்டை ஒரே சீராக வைத்திருக்க உதவும்.மலச்சிக்கலை அகற்றும்.

இந்த கீரையை வாரத்திற்கு இரண்டு முறையாவது உட்கொண்டு வந்தால் பொதுவான ஆரோக்கியம் கட்டிக்காக்கப்படும்.





Comments