பலவிதமான மருத்துவ குணமுடிய கீரை - கால்சியம் சத்து அந்த கீரையில் மிகத் தாரளமாகக் கிடைக்கிறது...
அகத்திக் கீரைநமக்கெல்லாம் மிகவும் அறிமுகமான கீரை வகைகளில் அகத்திக் கீரை ஒன்று.அகத்திக் கீரையை மக்கள் சமைத்துச் சாப்பிடுவதோடு,வீட்டு வளர்ப்புப் பிராணியான மாடுகளுக்கும் தீவனமாகத் தருகின்றனர்.பால் கறக்கும் பசுக்களுக்கு அகத்திக் கீரையை நாள்தோறும் தீவனமாகத் தந்தால் வழக்கத்தைவிட அதிகமாக பால் கொடுக்கும்.
எலும்பு, பற்கள் ஆரோக்கியத்துக்கு நமது உடம்புக்கு கால்சியம் சத்து அதிகம் தேவை. இந்த கால்சியம் சத்து அகத்திக் கீரையில் மிகத் தாரளமாகக் கிடைக்கிறது.மற்றும் கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம் தேவைப் படக்கூடிய வைட்டமின் 'ஏ' சத்து அகத்திக் கீரையில் நிறைய உண்டு. சரியான ஊட்டச்சத்து இல்லாமல் வளரும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு பலவீனமடைந்து வளைந்துவிடுவதுண்டு. அகத்திக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய் வராமல் தவிர்த்துவிட முடியும்.
மூளையின் செயற்பாட்டை இந்த கீரை நன்கு ஊக்குவிக்கும். மூளைத்திறனை அதிகமாக்கும்.நினைவாற்றலை வளர்க்கும்.இந்த கீரை மலச்சிக்கலை நீக்கும்.
இந்த கீரையைப் பருப்பு சேர்த்துக் கூட்டாகத் தயாரித்து உட்கொண்டாலே மருந்து போல உடற்பிணிகள் பலவற்றை அகற்றும். நெடு நாள்கள் நோயாக இருந்து குணமானவர்களுக்கு உடல் மிகவும் பலவீனமாக இருக்கும்.அவர்கள் அகத்திக் கீரையைச் சூப்பாக வைத்து அடிக்கடி உட்கொண்டால் பலவீனம் அகன்று உடல் பலமடையும்.
பருப்பு கீரை
பித்தத் தொடர்புடைய எல்லா நோய்களையும் இது அகற்றும். அதிகமான உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியூட்டும்.சீத சரீரம் உள்ளவர்கள் இதை மிதமாகவே சாப்பிட வேண்டும்.
இந்தக் கீரை சிப்பிட மிக ருசியாக. பருப்பு போட்டுக் கடைந்து உண்ணலாம்.
அரைக் கீரை
அரைக் கீரையைக் கிள்ளுக் கீரை என்று சொல்வதுண்டு வளர்ந்திருக்கும் இந்தக் கீரையைப் பாதியளவு மட்டுமே கிள்ளியெடுத்துப் பயன்படுத்தலாம். அந்தக் கீரை தொடர்ந்து வளர்ந்து அடுத்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.

ஜலதோஷம்,தொடர்பான அனைத்துவித நோய்களையும் அற்புதமாகக் குணமாக்கும் ஆற்றல் இதற்குண்டு. குறிப்பாக சீதளக் காய்ச்சல்,கபக் காய்ச்சல், சன்னிபாதக் காய்ச்சல்,குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகவே பயன்படும். அரைக் கீரை உடல் சூட்டை அதிகப்படுத்தும் எனச் சிலர் சொல்வதுண்டு.இது அவ்வுளவு சரியான கருத்தன்று.
இந்த கீரை தாது பலத்தை அதிகமாக்கும் சக்தியுண்டு. இளம் பருவத்தில் பாலுணர்வு தொடர்பான தவறுகள் காரணமாக ஆண்மையிழந்தவர்கள், இந்த கீரையைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இழந்த ஆண்மையைத் திரும்பப் பெற முடியும்.
செங்கீரைக் தண்டு
செங்கீரை என்பது தண்டு மட்டும் சிவப்பாகவும் இலைகள் பச்சையாக உள்ள ஒருவகைக் கீரை.இதன் கீரையைவிட, தண்டுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். நல்ல சத்துகளும் தண்டில்தின் அதிகமாக உள்ளன.
பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய பல கோளாறுகளை செங்கீரைத் தண்டு குணமாக்கும்.மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுவிடுங்காலத்தில் சில பெண்களுக்கு பெரும்பாடு என்னும் அதிக ரத்தப் போக்கு ஏற்படுவ துண்டு. இந்தக் கோளாற்றை செங்கீரைத் தண்டு அகற்றி விடும்.
பொதுவாக ரத்த பேதி - சீதபேதி போன்ற கோளாறுகளையும் குணமாக்கும்.
Comments
Post a Comment