- Get link
- X
- Other Apps
தடுப்பூசியை தவிர்க்காதீர்: ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளில் 96% பேர் தடுப்பூசி போடாதவர்களே!"
மும்பை நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் உள்ளவர்களில் 96% பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போராதவர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒருவர் கூட தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
உலகமெங்கும், ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் மருத்துவமனைக்கு செல்லும் நிலைமை ஏற்படாமல், எல்லோரும் எளிதில் குணமாவதற்கு தடுப்பூசியே காரணம் என்பது மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.
எனவே, அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கொரோனா தடுப்பூசி குறித்த கட்டுக்கதைகள் எதிலும் கவனத்தை சிதற விடாதீர்.
Comments
Post a Comment