சிங்னாத்திடே குடும்பத்தைச் சேர்ந்த 24 மீன் சிற்றினங்களில் ஒன்று கடல் குதிரை
இவை முன்னோக்கி சுருண்ட தொற்றிக் கொள்ள உதவும் வால் அமைப்பினால் தாவரங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கின்றன.இச்சிற்றினங்கள் 1.5 -12 அங்குல (4-30 செ.மீ.) நீளம் வளர்பவை. செதிள்களூக்குப் பதிலாக எலும்பு வளையங்களைப் பெற்றுள்ளன.
இவற்றின் கண்கள் தனித்து நகரக் கூடியவை. இவை நேராக துடுப்பின் துணையுடன் கிடைமட்டமாகவும்,நீச்சல்பை உதவியுடன் செங்குத்தாகவும் நீந்தக் கூடியவை.
சிறு உயிரினங்களை உறிஞ்சிப் பிடித்து தனது சிறிய வாய்க்குள் விரைவாக தள்ளுகிறது.பெண்ணினம் முட்டைகளை ஆண் இனத்தின் வாலின் அடியில் அமைந்துள்ளது இளம் உயிரிவளர் பையில் இடுகிறது. ஆண் இனம் குஞ்சு வெளிவந்தவுடன் அவற்றை வெளியேற்றுகிறது.
Comments
Post a Comment