Marvel Spider-Man and Thor-inspired NTorq 125

டி.வி.எஸ் மார்வெல் ஸ்பைடர் மேன் வண்ணத்தில் என் டார்க்.....



இரு சக்கர வாகங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டி.வி.எஸ்.ஸ்கூட்டர் நிறுவனத் தயாரிப்புகளில் அதிக வரவேற்பைப் பெற்ற மாடல் என் டார்க்.இதில் தற்போது ஸ்பைடர் மேன் டிசைன் கொண்ட பெயிண்டில் புதிய மாடல் அறிமுகமாகி உள்ளது.

அத்துடன் தார் வண்ணத்தில் பல டிசைனைக் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்குவாட் எடிஷனாக வந்துள்ளது. ஸ்பைடர் மேனில் அடையாளமாகக் கருதப்படும் சிவப்பு, நீலக் கலைவையாக பார்ப்போரைக் கவரும் வகையில் இது வெளிவந்துள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் ஸ்பைடர் மேனில் சிலந்தி பின்னால் ஆகியனவும் கச்சிதமாக அழகுற இடம்பெற்றுள்ளது.




ஏற்கனவே பிரபலமான கதாபாத்திரங்களான அயர்ன் மேன்,பிளாக் பேந்தர் மற்றும் கேப்டன் அமெரிக்கா ஆகியவற்றின் நிறங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.இப்போது ஸ்பைடர் மேன் நிற ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வந்துள்ளன.என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை.


இது 9.4 ஹச்.பி திறனையும் 10.5 நியூட்டன் மீட்டர் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.124.8 சி.சி திறன் கொண்ட 3 வால்வு என்ஜினை கொண்டுள்ளது.டி.வி.எஸ் கனெக்ட் செயலி இணைப்பு வசதியில் இடம்பெற்றுள்ளது.

 

Comments