Magabaratham - துரோணரின் வில்லும் முடிவும்

"அர்ச்சுனா, துரோணர் வில்லைக் கையில் வைத்திருக்கும் வரையிலும் அவரை யாரும் வெல்ல முடியாது.




"அர்ச்சுனா, துரோணர் வில்லைக் கையில் வைத்திருக்கும் வரையிலும் அவரை யாரும் வெல்லமுடியாது. அது நிச்சயம். தருமநெறி எதுவும் பாராது ஏதாவது செய்தால்தான் அவரை வெற்றிகொள்ள முடியும்.ஒருவழி இருக்கிறது :துரோணர் அசுவத்தாமன் மீது வைத்திருக்கும் பாசம் எல்லையற்றது. அசுவத்தாமன் இறந்ததாகக் கேள்விப்பட்டால் போதும்.துரோணர் போர் புரியமாட்டார். துயரத்தினால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிடுவார். யாராவது துரோணரிடம் சென்று அசுவத்தாமன் இறந்தான் என்று சொல்லவேண்டும்".

கண்ணன் கூறிய யோசனையைக் கேட்டு முகம் சுளித்தான் அர்ச்சுனன்.அந்த அசாத்திய வழியைக் கேட்ட பாண்டவர்கள் அனைவருமே அது முறையல்ல என்று தலையாட்டினர். "வேறு வழியில்லை ;துரோணரை நீங்கள் செல்வதற்கு இதுதான் வழி " என்று திரும்பவும் கண்ணன் கூறியபோது யுதிஷ்டிரன் யோசித்தான்.

"இந்த அதர்மச் செயலை நான் செய்து பாவத்தை சுமக்கிறேன்"என்றான் தருமன். அப்போது பீமன் தனது இரும்புக்கதையைத் தூக்கி அசுவத்தாமன் என்ற போர் யானையைக் கொன்றான். கொன்றுவிட்டுத் துரோணருடைய படைப் பகுதியருகில் சென்று அவர் காதில் விழும்படியாக உரத்த குரலில் " அசுவத்தாமனை கொன்றேன் " என்று கூறிவிட்டு வெட்கத்தால் முகம் புதைத்துக் கொண்டான்.இத்தனை இழிவான செயலை யுத்தகளத்தில் செய்ய நேர்ந்தது என்று பீமன் வேதனைப் பட்டான்.


பிரம்மாஸ்திரத்தை எடுத்து அர்ச்சுனன் மீது பிரயோகப்படுத்த துரோணர் முயன்ற சமயம்' அசுவத்தாமன் இறந்து விட்டான்' என்ற சத்தம் கேட்டதும் ஒருகணம் தயங்கி நின்றார்.

அது உண்மையாக இருக்காது என்று சந்தேகமும் ஏற்பட்டது. அதனை நிவர்த்தித்துக்கொள்ள துரோணர் தருமனைப் பார்த்து, "என் மகன் இறந்து உண்மையா? என்று கேட்டார்.தருமன் பொய் கூறமாட்டான் என்று நம்பி துரோணர் அவனிடம் கேட்டார்.

இப்போது கிருஷ்ணன் மனம் பேதலித்தது.தருமன் பொய் சொல்லத் தயங்கினால் பாண்டவர்களுக்கு நாசம் வந்து சேரும் என்று எண்ணினான். தருமன் எப்படி பொய் கூறுவது என்று அச்சத்தில் மூழ்கினான். ஆனால் வெற்றி பெறவும் வேண்டும் என்ற ஆசை இருந்தது.

என்னுடைய பாபமாக இருக்கட்டும் என்று மனதை ஸ்திரப்படுத்திக் கொண்டு,"அசுவத்தாமன் இறந்தது உண்மை " என்று உரக்கச் சொன்னான்.சொல்லும்போது மறுபடியும் அதர்மத்துக்குப் பயந்து, " அசுவத்தாமன் என்கிற யானை "என்று தாழ்ந்த குரலில் சேர்த்து சொன்னான்.
 
தருமன் வாயால் இவ்வாறு பொய் சொற்கள் வெளியான உடனே தரும புத்திரனுடைய ரதம் அதுவரையில் பூமியைத் தீண்டாமல் எப்போதும் தரைக்கும் மேல் நான்கு அங்குலத்தில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று கீழே இறங்கி மண்ணைத் தொட்டது.



அசுவத்தாமன் இறந்தான் என்ற மொழியைக் கேட்டதும் துரோணருக்கு உயிர்மீதான பற்று நீங்கிவிட்டது.அப்படியே எவ்வித இயக்கமும் இன்று துரோணர் நின்று கொண்டிருந்த நிலையில் பார்த்துவிட்டு பீமன் அவரைக் கண்டபடி திட்டினான்.

பிராமணர்கள் தங்களுக்குரிய தொழிலை விட்டு சத்திரியர்களுடைய தொழிலில் புகுந்ததால்தான் அரசர்களுக்கு ஆபத்து வந்தது.கொல்லாவிரதமே மேலானது அறம் என்றும் அந்த அறத்திற்கு பிராமண குலமே வேர் என்றும் அறிந்த நீர்,அந்தணர் குலத்தில் பிறந்திருந்தும் வெட்கமின்றி கொலைத்தொழில் செய்து வந்தீர்.ஏன் இந்த பாவகாரியத்தில் இறங்கினீர் " என்றால்.


பிரியமான மகன் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று ஏற்கனவே வெறுப்புக் கொண்ட துரோர் பீமனின் இந்த நிபந்தனையை கேட்டதும்  அஸ்திரங்களை எறிந்துவிட்டு தேர்த்தட்டின் மத்தியில் உட்கார்ந்து யோக நிஷ்டையில் அமர்ந்து விட்டார்.

அதே சமயம் திருஷ்டத்துய்மன் கத்தியெடுத்து வந்து துரோணருடைய தலையைத் துண்டாக்கி விட்டான். பரத்வாஜபுத்திரர் துரோணாச்சாரியரின் ஆத்மா மக்கள் யாவர் கண்ணுக்கும் தெரியும்படியாக ஜோதிமயமாக மேலூலகம் சென்றது.

Comments