MAGABARATHAM - கடோத்கஜனுடன் கர்ணன் மோதினான்

                   கர்ணன் படையையே ஆட்டம் காட்டிய பீமன் மகன்




கடோத்கஜனுடன் வதம்:

பதினான்காம் நாள் சூரியன் மறைந்த பின்னும் இரவில் யுத்தம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு தீவட்டிகளை ஏந்திக் கொண்டு இருதரப்பினரும் யுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

இருளே வசதியாகக் கொண்டு பீமனின் மகன் கடோத்கஜனும் அவன் மாயக்கூட்டமும் துரியோதனன் படையை இரவில் பலமாகத் தாக்கினார்கள். அந்த ராத்திரி யுத்தம் மகா அற்புதமாக நடத்தும் கொண்டிருந்தது.

ஆயிரக்கணக்கான தீ பந்தங்களை ஏற்றி வைத்துக்கொண்டு வீரர்கள் யுத்தம் செய்தனர்.




கடோத்கஜனுடன் கர்ணன் மோதினான். கடோத்கஜனுடைய பூதகணப் படைகளால் கர்ணனின் வீரர் படையனைத்தும் மாய்ந்து போவதைக் கண்ட துரியோதனன் கர்ணனைப் பார்த்து "கர்ணா",இவனை உடனே கொல்வாயாக. இல்லையென்றால் நமது சேனை அனைத்தையும் அழித்து விடுவான் " என்று கூறினான்.

கர்ணனும் கடோத்கஜன் மீது கடும் கோபம் கொண்டிருந்தான். அவனால் அடிபட்டு கோபம் பொங்கிய நேரத்தில் இந்திரன் தனக்குக்  கொடுத்திருந்த சக்தியாயுதத்தை எடுத்து வீசினான்.அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே கர்ணன் இதுவரை பயன்படுத்தாது வைத்திருந்த ஆயுதத்தை கடோத்கஜனுக்காக வீழ்ந்தது.பாண்டவர்கள் அதனையறிந்து பெரிதும் துக்கத்தில் மூழ்கினர்.

Comments