Garland Judy good actor and singer - American

தனது மூன்றாம் வயதில் மேடை ஏறிய அமெரிக்கப் பாடகி மற்றும் நடிகை கிராண்ட் ரேபிட்ஸ்



இயற்பெயர் பிரான்சிஸ் கம் (1922, ஜீன் 10 கிராண்ட் ரேபிட்ஸ்,மின்னசோட்டா,அமெரிக்கப் பாடகி மற்றும் திரைப்பட நடிகை. பல்சுவை நிகழ்ச்சி நடத்துபவர்கள் குடும்பத்தில் பிறந்து. 

தனது மூன்றாம் வயதில் மேடை ஏறினார். எவ்ரி சண்டே (1936) என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகமாகும்வரை தன் சகோதரிகளுடன் பயணம் செய்து மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்.



பிராட்வே மெலோடி ஆப் 1938 மூலம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மிக்கி ரூனின்யின் கதாநாயகியாக லவ் பைண்ட்ஸ் ஆண்டி ஹார்டி (1938)உள்ளிட்ட 9 திரைப்படங்களில் நடித்தார், தி விஸார் ஆப் ஓஸ் (1939)என்ற படத்தில் டாரதியாக நடித்து,பன்னாட்டு நட்சத்திரமாக உயர்ந்தார். 

மீட் மீ இன் செயிட் லூயி (1944),ஈஸ்டர் பரேட் (1948) மற்றும் சம்மர் ஸ்டாக் (1950) ஆகியவை இசைக்காக வெற்றி பெற்ற படங்களுள் அடங்கும். இனிமையான, உணர்ச்சி ததும்பும் குரல் திறனால் சிறந்த மேடைப் பாடகியாகப் பல காலம் பாராட்டப் பட்டார் .லண்டன் பலேடியம், நியூயார்க் பேலஸ் தியேட்டர் அரங்குகளில் சாதனைகளை முறியடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்திய பின், எ ஸ்டார் இஸ் பார்ன் (1954) என்ற திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் வெற்றி உலா வந்தார். 


ஜட்ஜ்மெட் அட் நூரம்பர்க் (1961) படத்தில் நடிப்புக்காக பாராட்டப்பட்டார்.முறிந்து போன திருமண உறவுகள் மற்றும் போதை மருந்துப் பழக்கம் ஆகியவற்றால் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், இவர் குறைந்த வயதில் இதப்பதற்கு காரமாயின. இவரின் மகள்கள் லிசா மின்னெல்லி ( வீன்சென்ட் மின்னெல்லிக்குப் பிறந்தவர்) மற்றும் லோர்னா லப்ட், இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வந்தார் .

Comments