தென் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த நகரம் ,கங்கை கொண்ட சோழபுரம்
தென் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த நகரம்.முதலாம் ராஜேந்திர சோழரால் 11 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது.ராஜேந்திர சோழர் வடக்கே கங்கை ஆறு வரையிலான பகுதிகளை வென்று வெற்றிக் கொடியை நாட்டியதைக் கொண்டாடும் முகமாக நிறுவப்பட்டது.
உட்புற மற்றும் வெளிப்புறக் கோட்டைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. வெளிப்புறக் கோட்டை மிகவும் விசாலாமன ஒன்றாகும்.
தற்போதும் அந்த கோவிலை சுற்றி சத்திரியர்களே வாழுகிறார்கள் (பள்ளி என்ற வன்னியர்கள் - உடையார் பட்டம் உள்ள வன்னியர்கள்.குலோத்துங்க சோழன் திருமதில் பெருவழி,விளாங்குடியான் பெருவழி,குழியானை போன பெருவழி போன்ற நெடுஞ்சாலைகளின் பெயர்களும் கிழக்கே ஆறு கிலோமீட்டர் நீளத்திற்க்குப் பாயும் மதுராந்தக வடவாறு இந்நகரின் விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளது.
ஏராளமான கிணறுகளும்,குளங்களும் மக்களின் குடிநீர் முதலான பிற தேவைகளுக்காக வெட்டப்பட்டிருந்தன.இங்குள்ள சிவன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மிகப் பெரிய கோயிலாகும்.
Comments
Post a Comment