தேனீக்கள் குடும்பத்தைப் போலவே எறும்பு குடும்பத்திலும் இராணி எறும்பு இருக்கும்
எறும்புகளும், கரையான்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. ஆனால், இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றாக இருக்கும். கரையான்கள் பூமிக்கு மேலே புற்று கட்டினால், எறும்புகள் பூமிக்கு கீழ் புற்று கட்டும். கரையான் புற்றைப் போலவே எறும்பு புற்றிலும் பல வசதிகள் இருக்கும்.
தேனீக்கள் குடும்பத்தைப் போலவே எறும்பு குடும்பத்திலும் இராணி எறும்பு இருக்கும். அது ஆண் எறும்புகளுடன் கூடி இனப்பெருக்கம் செய்யும். உழைத்து உணவு தேடுவது, புற்று கட்டுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்பவை வேலைக்கார எறும்புகள் தான்.
வேலைக்கார எறும்புகள் ஒரு நாள் கூட ஓய்வு எடுப்பதில்லை. அவை உணவுக்காக பல கி.மீ தூரம் பயணம் செய்கின்றன. ஓயாமல் உழைப்பது என்பதற்கு சிறந்த உதாரணம் எறும்புகள் தான். சேமிப்பு பழக்கம் கொண்டவையும் அவை தான்.
பல உயிரினங்களுக்கு மழைக்காலங்களில் உணவு கிடைக்காது. ஆனால், எறும்புகளுக்கு கிடைக்கும். காரணம் அவை கடுமையாக உழைத்து உணவை சேமித்து வைத்திருப்பது தான்.
மருத்துவர் அய்யாவின் டிவிட்
Comments
Post a Comment