அருகம்புல் ஜுஸ் அருந்துங்கள் நோய்விட்டு போகும்

"அருகம்புல்" வாழைத்தண்டு" நெல்லிக்காய்" கேரட்         ஜுஸ்" தினந்தோறும் அருந்துங்கள் நோய்யில்லாமல் வாழுங்கள்.





அருகம்புல் ஜுஸ்


தேவையான பொருட்கள்
அருகம்புல் - 1 கைப்பிடி அளவு
மணத்தக்காளிக் கீரை - 5
வில்வ இலை - 3
வேப்பிலை - ஒரு ஆர்க்கு

செய்முறை 
       எல்லாவற்றையும் அரைத்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீரிழிவு நோய்,பிரஷர்,தோல் நோய்கள் கட்டுப்படும்.

    அருகம்புல் ஒரு கைப்பிடி,தேங்காய் ஒரு மூடி ஏலக்காய் ஒன்று சேர்த்து அரைத்து வடிகட்டி தேவையான வெல்லம் சேர்த்து அருந்தவும்.



கேரட் ஜுஸ்

தேவையான பொருட்கள்

கேரட் - 2
தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் - 1





செய்முறை
         எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து சாறு எடுத்து வடிகட்டியில் வடிகட்டி தேன் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து அனைவரும் அருந்தலாம்.

கேரட்டில் வைட்டமின் A,C இரண்டும் உள்ளது. 1/2 கிலோ கேரட்டில் 250 கிராம் சாறு எடுக்கலாம். இதில் கால்சியம்,சோடியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிரம்பி உள்ளது. ரத்தப் பூற்று நோய்க்கு நல்ல மருந்து, குடல்புண் போன்ற அல்சர் நோய் உள்ளவர்களுக்கும் நல்லது. கண் பார்வை குறைவு சரியாகும். குழந்தைகள் உணவில் தினமும் கண்டிப்பாக சேர்த்து வரவும்.

வாழைத்தண்டு ஜீஸ்

வாழைத்தண்டு - 2 துண்டு, நார் எடுத்து சுத்தம் செய்து நறுக்கி 1/2 லிட்டர் தயிர், தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி அருந்தவும்.



சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல் பருமன் குறையும்.அல்சர் நோய் உள்ளவர்கள் இவ்வாறு அருந்தினால்  குணம் ஆகும்.


நெல்லிக்காய் ஜீஸ்

1/2 கி நெல்லிக்காயை கழுவி கொட்டை நீக்கி, நறுக்கி சாறு எடுக்கவும்.1/2 கிலே நாட்டுச் சர்க்கரையை பாகு வைத்து இறக்கி ஆறினதும் நெல்லிக்காய் சாறு,1/2 டீ ஸ்பூன் ஏலப்பொடி,2எலுமிச்சை பழம் பிழிந்து கலந்து வைத்து 1/2 டம்ளர் ஜீஸ்,1/2 டம்ளர் தண்ணீர் கலந்து அருந்தவும்.







என்றும் இளமையுன் இருக்கலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது. கண்களுக்கு, கூந்தலுக்கும் மிகவும் நல்லது. நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.



Comments