இலங்கை வன்னி மண்ணில் ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து வீரப்போர் செய்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரக வன்னியன்..
தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் கடலூர் அஞ்சலையம்மால்,வீரபாண்டிய கட்டபொம்மன்.அவர்களை விட பல மடங்கு பலம் பொருந்திய வீரன். அவரை வெள்ளையர்கள் நெருங்கவே பல வருடங்கள் காத்திருக்கப் வேண்டிருந்தது.இலங்கை மண்ணில் வெள்ளையரை எதிர்த்தவன் 'பாயும் புலி' பண்டாரக வன்னியன். முழுப் பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரக வன்னியன்.
தமிழர் ஆட்சி:
யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப் பிரதேசத்தைப் பண்டாரக வன்னியன் ஆண்டு வந்தான்.
வடக்கே யாழ்ப்பாணம் பரவைக் கடலையும்,தெற்க்கே அருவி ஆற்றையும்,மேற்கே மன்னார் மாவட்டத்தையும் கிழக்கே திரிகோண மலையையும் எல்லையாகக் கொண்டது வன்னிராஜ்ஜியம்.
பண்டாரக வன்னியனும்,கண்டி தமிழ் மன்னன் விக்கிரமராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.
டச்சுகாரர்களை விரட்டிவிட்டு,இலங்கையில் பல இடங்களைக் கைப்பற்றிக் கொண்ட வெள்ளையர்கள் பண்டாரக வன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.
தமிழ்நாட்டில் வெள்ளையருக்கு வரிகொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல்,பண்டாரக வன்னியனும் கப்பம் கட்ட மறுத்தான். அது மட்டுமல்ல வெள்ளையர்களை நெருங்கவே விடவில்லை ,கப்பம் கேட்டு வந்த வெள்ளையர்களை விரட்டி அடித்தான்.
வெள்ளையர்களை விடவில்லை 1797-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியைப் பண்டாரக வன்னியனிடம் அனுப்பி,கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறுனார்கள்.
வெட்டி வீழ்த்தினான்:
வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரக வன்னியன் வெகுண்டான்,எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்காரத் தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.
இதை பற்றி தகவல் தெரிந்துக்கொண்ட ,வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர்,படைகளைத் திரட்டிக் கொண்டு பண்டாரக வன்னியன் மீது போர் செய்தார்கள்.
கற்பூரப்புல் என்ற இடத்தில் இரு தரப்பு படைகளும் மோதின.பண்டாக வன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து,பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.
பாயும் புலி பண்டாரக வன்னியனின் படைகளின் தாக்குதலைச் எதிர்க்கொள்ள முடியாமல்,வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.
மீண்டும் போர்:
ஆங்கிலேயர்கள்,எப்படியாவது பண்டாரக வன்னியனைத் தோற்கடித்து விட வேண்டும் என்று பெரும் படை திரட்டினார்.
இதை அறிந்துக் கொண்ட பண்டாரக வன்னியன்,வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதியின் கோட்டையை, 1803 ஆம் ஆண்டு தாக்கினான். அப்போது கேப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரக வன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது.
பண்டாரக வன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது.
வெள்ளையர்கள் பண்டாரக வன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்ப்பாணம், மன்னார்,திரிகோணமலை என்ற மூன்று இடங்களில் இருந்து வெள்ளையர்கள் மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று, பண்டாரக வன்னியனைத் தாக்கினர்.
வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும்போது,பண்டாரக வன்னியனின் படை மிகச்சிறியது, இருப்பினும்,அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.
போரில் பண்டாரக வன்னியன் படு காயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள்,பனங்காமம் என்ற இடத்துக்குப் பண்டாரக வன்னியனைத் தூக்கிச்சென்றனர்.சிகிச்சை அளித்துக் குணப்படுத்த எவ்வளளோ முயன்றும் பலன் இல்லை.
1803-ம் ஆண்டு அக்டோபர் முப்பத்தி ஒன்று தேதி பண்டாரக வன்னியனின் உயிர் பிரிந்தது - இவர் வீரத்தை பார்த்துப் வெள்ளையர்கள் மிரண்டனர் அதுமட்டுமா அவர் உயிர் பிரிந்த பிறகு கண்ணீர் விட்டனர் .
பண்டாரக வன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் அதாவது நினைவு கல் நடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment