இலங்கை மீது கரிகால் சோழன் படையெடுப்பு - பல்லவ மன்னன் நரசிம்மவர்மரின் போர் வெற்றியும் தமிழரின் வீர வரலாறு

இலங்கை மீது கரிகால் சோழன் படையெடுப்பு - பல்லவ மன்னன் நரசிம்மவர்மரின் போர் வெற்றியும் தமிழரின் வீர வரலாறு


இலங்கை மீது கரிகால்சோழன் நடத்திய படையெடுப்பு முக்கியமானது.

படையெடுப்பு 


இலங்கை மீீது படையெடுத்தான் .அங்கு ஆண்ட சிங்களமன்னனை முறியடித்தான்.தான்வெற்றிக்கொடியை பறக்கவிட்டான்.

பின்னர் 12,000 சிங்களர்களைச் சிறைப்படுத்தித் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தான். அவர்களை பயன்படுத்தி திருச்சிராப்பள்ளி அருகே காவிரியின் குறுக்கே ''கல்லணை''யைக் கட்டினான்.உலகத்திலேயே மிக வழுவான பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது.
கஜபாகு 

கரிகாலன் படையேடுப்பின்போது சிங்கள இளவரசன் கஜபாகு சிறுவனாக இருந்தான். (கஜபாகு என்றால் யானையை போன்று கைகளை உடையவன் என்று பொருள்)
அவன் ஒருநாள் நகர சோதனைக்குச் சென்றபோது ஒரு வீட்டில் விதவைப் பெண் ஒருத்தி உரத்த குரலில் அழும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணைக் கஜபாகு சந்தித்து ''ஏன் அழுகிறாய்? என்று கேட்டான்.
பல ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் ஒருவன் இலங்கை மீது படையெடுத்தான். அந்தச் சோழ மன்னன் சிங்களர் பலரைச் சிறைப் பிடித்து,தமிழ்நாட்டில் அணை கட்டுவதற்க்காக அழைத்துச் சென்றான். அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பிவரவேயில்லை. சோழனுடன் போன என் பிள்ளைகளும் திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்களோ என்று நினைத்து அழுதேன்" என்றாள்,அந்த பெண்மணி.
இதை கேட்ட கஜபாகு ஆத்திரம் அடைைந்தான் .கரிகால்சோழனைப் பழி வாாங்குவதாக சபதம் செய்தான்.

பெரும் படையை திரட்டினான். சோழ நாட்டின் மீது படையேடுத்துச் சென்றான்.இதற்கிடையே கரிகால்சோழன் இறந்துவிட்டான்.
சோழப் படைகளுடன் கஜபாகு கடும் போர் புரிந்தி,சிறைபிடிக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் சிங்களர்களை மீட்டான். பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில், ஆயிரக்கணக்கான தமிழர்களைச் சிறை பிடித்து வந்து, இலங்கையில் குடியேற்றினான்.இலங்கை மீது கரிகால்சோழன் படையெடுத்துச் சென்றது, வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சி. மற்றவை, "பூஜாவலி "என்ற இலங்கை நூலில் காணப்படும் தகவல்கள்.

கண்ணகி

இந்த கஜபாகு, தமிழ்நாட்டுக்கு வந்து, "கண்ணகி" விழா"வில் கலந்து கொண்டதாக ,சிலப்பதிகாத்தில் கூறப்பட்டுள்ளது .அது மட்டுமின்றி, இலங்கையில் கண்ணகிக்குச் சிலை எடுத்து வழிபாடு செய்தான் என்றும் வரலாறு நூல்கள் கூறுகின்றது .
அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை, சிங்கள மன்னன்துட்டாகாமின்தோற்க்கடித்தான் அல்லவா?அதன்பின், அப்பகுதியை தமிழ் மன்னர்களும், சிங்களமன்னர்களும் மாறி மாறி அரசாண்டதாக வரலாறு கூறுகிறது. ஏழு தமிழ் மன்னர்கள் இவ்வாறு அங்கே ஆட்சி நடத்தியுள்ளனர்.

மணிமேகலை 

சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் "மணிமேகலை "காப்பியத்தில் பழகால இலங்கை பற்றி குறிப்புகள் வருகின்றன.மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு பூங்காவில் மயக்கம் அடைந்து விழுந்தாள். மணிமேகலா தெய்வம், அவளை மணிபல்லவம் தீவுக்கு தூக்கிச் சென்றது.

இலங்கையின் வடபகுதி அருகே நைனா தீவு உள்ளது. இந்த தீவுதான், பழங்காலத்தில் மணிபல்லவம் 'என்று அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.அந்த தீவில் இருந்த பெரிய புத்தர் சிலையை மணிமேகலை வாங்கினாள்.அருகில் ஒருபெரியபொய்கைஇருந்தது.பவுர்ணமி நாளில் இதில் இருந்து 'அமுதசுரபி 'என்ற அட்சய பாத்திரம் வெளிப்பட்டது. உணவை எடுக்க எடுக்க, தொடர்ந்து உணவு வந்து கொண்டே இருக்ககூடிய அதிசய பாத்திரம் அது.அமுதசுரபியைக் கொண்டு, ஏராள மானவர்களுக்கும் உணவளித்தாள், மணி மேகலை ''.

இவ்வாறு மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.

பல்லவர் படையெடுப்பு 

இலங்கை மீது நரசிம்மவர்மர் காலத்தில் நடந்த பல்லவர் படையெடுப்பு பற்றிய விவரங்கள், தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.

தமிழகத்தில் கி.பி.630-660-ல் ஆட்சி புரிந்த நரசிம்மவர்மர் காலத்தில், இலங்கை யில் இருந்த மானவன்மன் என்ற அரசன் அவரிடம் அடைக்கலம் கோரி வந்தான்.இலங்கையில், மணிமகுடம் யாருக்கு என்று மானவன்மானுக்கும்,அவன்சகோதரன் அட்டதத்தனுக்கும் போட்டி ஏற்ப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மானவன்மன் இலங்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.
மானவன்மன், நரசிம்மவர்மரிடம் தஞ்சம் அடைந்து,தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான். அந்தச் சமயத்தில், சாளுக்கிய அரசன் புலிகேசி ஆண்ட வாதாபி மீது நரசிம்மவர்மர் படையெடுத்துச் சென்றார். அவருக்கு மானவன்மன் உதவியாக இருந்தான்.இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மானவன்மனுக்கு உதவியாக ஒரு படையை இலங்கைக்கு நரசிம்மவர்மர் அனுப்பினார் ஆனால் அந்த படை முறியடிக்கப்பட்டது. தோல்வியுடன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான். மானவன்மன்.நடந்ததை அறிந்த நரசிம்மவர்மர் ஒரு பெரும் படையைக் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பினார். அந்த படையிடம் அட்டதத்தன் படை தோற்றது. மானவன்மன் இலங்கை அரசன் ஆனான்.

பழம்பெருமை கொண்ட தமிழ் அரசப்படைகள்

Comments