கரடி வகைகளும் காட்டில் குறைந்து கொண்டுருக்கின்றன
காட்டில் வசிக்கும் கரடி (Black bear) இதன் எண்ணிக்கையும்,வகைகளும் குறைந்து கொண்டிருக்கின்றன.
எனினும், இப்போது வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் கரடி இதுவேயாகும்.வளர்ச்சியுற்ற பெரிய கரடிகள் 5-6 அடி (150-180 செ.மீ) நீளமும்,200-600 பவு (90-270 கி.கி.) எடையும் கொண்டவை.இவை பல வண்ணங்களில் காணப்படுவதுண்டு.
எனினும் எல்லா வகைகளுமே கரும்பழுப்பான முகமும் மார்பில் ஒரு வெண்மையான அடையாளமும் கொண்டிருக்கும்.
பிற விலங்குகளையும்,தாவரங்களையும் உண்ணும்.பைன் உலர் கனிகள், பெர்ரி,வேர்க் கிழங்குகள் போன்றவற்றை உண்ணும்.
இது அடிக்கடி மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் உண்ணத் தகுந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடும். இவற்றைப் பழக்கப்படுத்தி கேளிக்கைகளைக் கற்றுக் கொடுக்க முடியுமென்றாலும் வளர்ச்சி பெற்ற பின்னர் இவை அபாயமானவையே.
Comments
Post a Comment