வாழைப் பழங்களின் வகைகளில் கொட்டிக்கிடக்கும் வைட்டமின் ஏ,பி,பி2,சி போன்ற சத்துக்கள் தாராளமாக உள்ளன
பூவன் வாழைப்பழம்:
உடலுக்கு நல்ல ஊட்டச சத்தினைத் தரக் கூடியது. இது உடல் வளர்ச்சிக்கும் தசைகளின் ஆரோக்கியத்துக்கும் நல்ல முறையில் பயன் தருகின்றது.
இந்த பழத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு இயல்பு மலச்சிக்கலை அகற்றுவதாகும். மலச் சிக்கலை அகற்றுவதில் அற்புதமான ஒரு மருந்து போலவே இது செயற்படுகிறது.ஒவ்வொரு நாளும் இரவில் உணவுக்கு பிறகு குறைந்த பட்சமாக ஒரு பூவன் பழத்தை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டால் அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினையே தோன்றாது.அவர்களுடைய ஜீரண சக்தி எப்பொழுதுமே மிகவும் நல்ல முறையில் இருக்கும்.
அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டால் கனமான உணவு உண்ணுவதை அடியோடு நிறுத்திவிட்டு ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டும் பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு எந்த மருந்தும் சாப்பிடாமலே குணமாகிவிடும்.
பச்சை வாழைப்பழம்:
இந்த பழத்தின் நிறத்தை அடிப்படையாக வைத்து இதற்க்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.நன்கு பழுத்த கனிந்த பிறகும் இந்த வகைப் பழங்கள் பச்சை நிறமாகவே காட்சி தரும்.
நன்கு கனுந்த பச்சை வாழை மிகவும் ருசியாக இருக்கும். மற்ற பழங்களைவிட சற்று நீளமாகவும்,சீரான பருமனாகவும் இருக்கும்.
அதிகப்படும் உடல் உஷ்ணத்தொ தணிக்கும் சிறப்பு இதற்கு உண்டு.
இதன் இயல்பு மிகவும் குளிர்ச்சியாதலால் சீதள உடல் வாகு அமையப்பெற்றவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடாமலிருப்பது நல்லது அல்லது குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
வாதக் கோளாறுகளை அதிகப்படுத்தும் இயல்பு இதற்கு உண்டு.அதனால் வாத நோயாளிகள் இந்த பழத்தை அறவே சாப்பிடாமல் விலகுவது நல்லது.
காசநோய், ஆஸ்த்மா எனப்படும் சுவாச காசநோய் போன்றவறிற்கு இந்த பழம் கடுமையான எதிரியாகும.
மேற்கண்ட பிணிக்கு இலக்கானவர்கள் முக்கியமாக குளிர்,மழை காலத்தில் தொட்டுப் பார்க்கவும் விரும்பக் கூடாது.
கொஞ்சம் சாப்பிட்டாலும் நோயின் கடுமையை அதிகரித்து பெருந்தொல்லையைத் தோற்றுவித்து விடும்.
குளிர்காய்ச்சல்,ஜலதோஷம் காரணமாகத் தோன்ளும் காய்ச்சல் நோயாளிகள், தவிர்த்து வேறு காரணமாக ஏற்படும் காய்ச்சலுக்கு இந்தப் பழத்தைக் கொடுத்தால் காய்ச்சலின் வேகம் தனியக் கூடும்.
மலை வாழைப்பழம்:
இந்த வகை பழம் தனிப்பட்ட இனிமையான மணமும் ருசியும் பெற்றுத் திகழும்.இது சற்று விலை அதிகமாக இருக்குமாதலால் சாமானிய மக்களால் அடிக்கடி சாப்பிட இயலாமற் போகலாம். எனினும் இதன் மணத்துக்காகவும் ருசிக்காகவும் சாமானிய மக்களும் இந்த வகை பழங்களைச் சற்று அதிகப் பணம் கொடுத்தேனும் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கலாம்
மலைவாழைப்பழம் இரத்தத்தின் வளத்துக்கு உதவக் கூடியதாக உள்ளது.
எவ்வளவு கடினமான உணவினை உண்டாலும் கடைசியாக ஒரு மலைவாழைப் பழத்தைச் சாப்பிட்டில் எளிதாக ஜீரணமாகிவிடும்.
கடுமையான அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு குடற்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் மலை வாழைப்பழத்துடன் சிறிது ஆமணக்கெண்ணையைச் செர்த்துப் பிசைந்து சாப்பிட மறுநாள் இரண்டொரு முறை இலேசாக பேதியாகும்.அஜீரணக் குறைபாடும் அகன்று விடும்.
பொதுவாக அன்றாடம் மலம் சுலபமாக அகல மலை வாழைப்பழம் உதவும்.
நாட்டு வாழை:
நல்ல சதைப்பற்றுடன் கூடியது இந்தப் பழம் இதனை முழு உணவு என்றே கூறலாம்.இந்த பழத்தைச் சாப்பிட்டு விட்டு வேறு உணவு சாப்பிடாமல் சில நாட்களைக் கடத்தி விட முடியும்.
பலவீனமான உடல் படைத்தவர்கள் தொடர்ந்து நாட்டு வாழையைச் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல வலிமை பெற்று காட்சியளிக்கும்.
மற்றும் பூவன் பழம்,மலைவாழைப்பழம் போன்றவற்றின் குணங்களும் இந்தப் பழம் போன்றவற்றின் குணங்களும் இந்த பழத்தில் அடங்கியுள்ளது.
ரஸ்தாளிப்பழம்:
தனியானதொரு சுவையானதும் ஊட்டச்சத்து நிரம்பியதுமாக ரஸ்தாளிப்பழம் விளங்குகிறது.
இது மந்தத்தைக் கட்டும் தன்மையதாக இருப்பதால் அதிகமாக சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அதிலும் உணவுக்குப் பிறகு உடனே ரஸ்தாளி சாப்பிடுவது நல்லதல்ல.
அதிகமான உஷ்ணம் காரணமாகவோ,அஜீரணம் காரணமாகவோ சில சமயம் குழம்பு போல அடிக்கடி மலம் கழியும்,உடனடியாக அதை கவனித்து தக்க சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது சீதபேதியாகவோ, இரத்த பேதியாகவோ மாறிவிடக் கூடும்.
அந்த மாதிரி குறைபாட்டிருக்கும் போது ஒரு டம்ளர் நீரில் நன்கு கனிந்த ரஸ்தாளிப் பழத்தை உரித்து போட்டுப் பிசைந்து கரைத்துக் குடித்து விட வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்க உடன் வயிற்றுப் போக்கு நின்று நல்ல குணம் தெரியும்.
ReplyForward |
Comments
Post a Comment